ETV Bharat / state

வழக்குரைஞரின் உதவியாளருக்கு பாசிட்டிவுனு சொன்னாங்க... ஆனா இப்ப அது இல்லையாம்! - சென்னை: அரசு வழக்கறிஞரின் குமாஸ்தாவிக்கு கரோனா உறுதி

சென்னை: உயர் நீதிமன்ற அரசு வழக்குரைஞரின் உதவியாளருக்கு கரோனா தொற்று உறுதி என மருத்துவர்கள் கூறியிருந்த நிலையில் தற்போது அவருக்குத் தொற்று இல்லையென தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்
author img

By

Published : Apr 19, 2020, 10:40 AM IST

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை அரசியல் கட்சிகள், தன்னார்வலர்கள் ஏழைகளுக்கு உணவு வழங்கக் கூடாது என்ற தமிழ்நாடு அரசின் உத்தரவை எதிர்த்து திமுக தொடர்ந்த வழக்கில், அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞர் அவரது உதவியாளருடன் நீதிமன்றத்திற்கு வந்திருந்தார்.

பின்னர், தனக்கு காய்ச்சல், சளித்தொல்லை இருப்பதாகத் தெரிவித்த உதவியாளருக்கு உடனடியாக மருத்துவப் பரிசோதனை செய்ததில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து தனிமைப்படுத்தப்பட்ட அவருடன் யார் தொடர்பில் இருந்தனர். எங்கெல்லாம் சென்றார் என மருத்துவ அலுவலர்கள் ஆய்வுமேற்கொண்டனர்.

அரசு வழக்குரைஞரின் உதவியாளருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட செய்தி பரவிய நிலையில் தற்போது அவருக்கு மறுபரிசோதனை செய்ததில் தொற்று இல்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து ஆதாரப்பூர்வமான தகவல் விரைவில் வெளியிடப்படும் எனச் சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: கரோனா வைரஸ்; தமிழ்நாட்டின் நிலை என்ன? – அமைச்சர் விளக்கம்

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.