சென்னை: ஆத்தூர் அடுத்த அப்பம்மாசமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட இராமநாயகன் பாளையம் கிராமம் காரமடை திட்டு பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் கண்ணையன் மற்றும் கிருஷ்ணன். 6.5 ஏக்கர் நிலம் வைத்திருந்தாலும். இவர்களால், கடந்த 4 ஆண்டுகளாக அந்த நிலத்தில் விவசாய பணிகளும் மேற்கொள்ள முடியவில்லை. இதற்கு காரணம் பாஜக நிர்வாகி குணசேகரன் காரணம் என தொடர்ந்து குற்றம் சாட்டி வந்துள்ளனர்.
பல்வேறு விதங்களிலும், தங்களுக்கு பாஜக நிர்வாகி குணசேகரன் நெருக்கடி அளிப்பதாக சகோதரர்கள் புகார் கூறிய நிலையில், அதனை குணசேகரன் முழுமையாக மறுத்தார். 6.5 ஏக்கர் நிலம் இருந்த போதிலும், அதனை உரிய முறையில் பயன்படுத்தி விவசாயம் செய்ய முடியாமல் தவித்த சகோதரர்களுக்கு, சாதிப் பெயரைக் குறிப்பிட்டு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியது தொடர்ந்து சர்சையானது.
இதனைத் தொடர்ந்து, தற்போது மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கக்கோரி சென்னை ஜி.எஸ்.டி துணை ஆணையர் பாலமுருகன் குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதி உள்ளார். அவர் எழுதிய கடிதத்தில், "ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் கண்ணையன் மற்றும் கிருஷ்ணன். 6.5 ஏக்கர் நிலம் வைத்திருந்தினர். இவர்களுக்கு தொடர்ந்து சேலம் பாஜக கிழக்கு மாவட்டச் செயலாளர் குணசேகரன் தொடர்ந்து அவர்களுக்கு நெருக்கடி கொடுத்துள்ளார்.
இவர்கள் தொடர்ந்து 4 ஆண்டுகளாக எந்த விதமான விவசாயத் தொழில்களையும் செய்ய முடியவில்லை. இவர்களின் வங்கிக் கணக்கில் ரூ.450 மட்டுமே உள்ளது. இது மட்டுமின்றி இவர்கள் முதியோர் ஓய்வூதியத் திட்டத்தில் வரும் ரூ.1000-ஐ வைத்துதான் தங்களின் வாழ்வை நடத்தி வருகிறார்.
மேலும், அமலாக்கத்துறை சார்பில், கண்ணையன் மற்றும் கிருஷ்ணன் ஆகியோருக்கு அனுப்பப்பட்ட சம்மனில், "இந்து பள்ளர்கள்" என்று குறிப்பிட்டு அனுப்பப்பட்டுள்ளது. இந்த சம்மனை அனுப்பியது அமலாக்கத்துறையின் உதவி இயக்குநர் ரித்தேஷ் குமார். இந்த வழக்கையும் அவர்தான் விசாரித்து வருகிறார். மேலும் இவர்களை தொடர்ந்து பணமோசடி வழக்கில் விசாரணை மேற்கொண்டுள்ளார்.
சென்னை சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரான தங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் மிரட்டியதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் ஆனது, பாஜக தனது ஒரு ஆயுதமாக அமலாக்கத்துறையை கையாளுகிறது. இதற்கு பொறுப்பு ஏற்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமான் அமைச்சர் பதவில் இருந்து நீக்க வேண்டும்.
என்னுடைய 30 வருட அரசு வேலையில் இதுபோல் எந்தொரு அரசியல் தலையீடும் வந்ததில்லை. தொடர்ந்து எனக்கு இதுபோல் வந்துக்கொண்டிருக்கிறது. எங்கள் குடும்பம் விவசாய குடும்பம் சார்ந்தது. நானும் என் பணி ஒய்வுக்கு பிறகு விவசாயம்தான் செய்வேன்" என குறிப்பிட்டு குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதைத் தொடர்ந்து, சென்னை ஜி.எஸ்.டி துணை ஆணையர் பாலமுருகன் ஈ.டிவி பாரத் தமிழ் செய்தியாளரிடம் தொலைபேசி வாயிலாக பேசியபோது, "முன்பெல்லாம் அமலாக்கத்துறையில் நேர்மையான அதிகாரிகளை நியமிப்பார்கள். மேலும், எங்களுக்கு அரசியல் தலைவர்களின் தலையீடுகள் எதுவும் இருக்காது.
தற்போது, ஏழை தலித் விவசாயிகள் கண்ணையன் மற்றும் கிருஷ்ணன் 6.5 ஏக்கர் நிலம் வைத்திருந்தாலும், இவர்களால், கடந்த 4 ஆண்டுகளாக அந்த நிலத்தில் விவசாயப் பணிகளும் மேற்கொள்ள முடியவில்லை. இதற்கு காரணம் பாஜக நிர்வாகி குணசேகரன் என அவர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்துள்ளனர். இந்த நிலத்திற்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய விதம் சரியானதாக இல்லை. நிர்மலா சீதாராமன் நிதி அமைச்சர் ஆன பிறகே இது போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: பிரபல சிவில் காண்ட்ராக்டர் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை!