சென்னை: குரூப் 2 பணியில் அடங்கிய நேர்முகத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அல்லாத பதவிகளுக்கு நடத்தப்பட்ட முதல் நிலைத்தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் குரூப் 2 தேர்வில் அடங்கிய நேர்முக மற்றும் நேர்முகத் தேர்வு அல்லாத பணிகளுக்கு மே மாதம் 21ஆம் தேதி தேர்வு நடத்தியது. அந்த தேர்வு முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளது.
அதன் அடிப்படையில் ஒரு பணியிடத்திற்கு 10 நபர்கள் என்ற விகிதத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும், இவர்களுக்கான முதன்மைத் தேர்வு 2023 பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கிராமம் தோறும் டிரோன் பைலட்டுகள் - முதல்வர் துவக்கி வைத்த அதிரடி திட்டம்