ETV Bharat / state

கௌரவ விரிவுரையாளர்களின் ஊதிய நிலுவையை வழங்குக - அன்புமணி ராமதாஸ் - Guest Faculty Association

அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய நிலுவையை உடனடியாக வழங்கவேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Anbumani
அன்புமணி ராமதாஸ்
author img

By

Published : Aug 4, 2021, 1:56 PM IST

தமிழ்நாடு முழுவதும் உள்ள 149 அரசு கலை கல்லூரிகளில், 108 கல்லூரிகள் அரசு கல்லூரிகள், 41 அரசு கல்லூரிகள் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளாக இருந்து அரசு கல்லூரியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

108 அரசு கல்லூரியில் யுஜிசி தகுதியுடன் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்களுக்கும், யுஜிசி தகுதி இல்லாமல் தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றிவரும் கௌரவ விரிவுரையாளர்களுக்கும் சம்பளமாக ரூ.20 ஆயிரம் வழங்கப்படுகிறது.

ஆனால் கடந்தாண்டு தமிழ்நாட்டில் வேகமாக பரவிய கரோனா தொற்று காரணமாக யுஜிசி வழிகாட்டுதலின்பேரில் அரசு கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் மூலமாகவே பாடம் நடத்தப்படுகிறது.

ஊதிய நிலுவை

கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஜூன் முதல் ஏப்ரல் மாதம் வரை 11 மாதத்திற்கு மட்டுமே சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய நிலுவையை உடனடியாக வழங்கவேண்டும் என பாமக இளைஞரணி செயலாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,’’தமிழ்நாட்டிலுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றிவரும் 4 ஆயிரத்து 84 கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஏப்ரல் மாதம் முதல் ஊதியம் வழங்கப்படவில்லை என்று வெளியாகியுள்ள செய்திகள் மிகவும் வேதனையளிக்கின்றன. இது தவறு!

ஆன்லைனில் பணி

கல்லூரிகள் திறக்கப்படாததை காரணம் காட்டி ஊதியம் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. கல்லூரிகள் திறக்கப்படாவிட்டாலும் ஆன்லைனில் கௌரவ விரிவுரையாளர்கள் தொடர்ந்து பாடம் நடத்தி வரும் நிலையில் அதற்கான ஊதியத்தை மறுப்பது நியாயமல்ல!

ஊதியம் வழங்கப்படாததால் அவர்களும், அவர்களின் குடும்பத்தினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் வாட்டத்தைப் போக்கும் வகையில் ஊதிய நிலுவையை உடனடியாக அரசு வழங்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கரோனா: கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஆதரவு கரம் நீட்டுமா, தமிழ்நாடு அரசு?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.