ETV Bharat / state

பத்தாம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள்களை சரிபார்க்க உத்தரவு! - 10th board exam

சென்னை:பத்தாம் வகுப்பு மற்றும் பதினொன்றாம் வகுப்பில் விடுபட்ட பாடத்திற்கான காலாண்டு, அரையாண்டு விடைத்தாள்களை முகாம்களில் சரி பார்த்து மதிப்பெண்ணை பதிவேற்றம் செய்ய வேண்டும் என அரசு தேர்வுத் துறை இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Govt orders to check 10th board Quarterly and Halfyearly Exam

author img

By

Published : Jun 18, 2020, 11:36 PM IST

அரசு தேர்வுத் துறை இயக்குநர் பழனிசாமி அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், 'பத்தாம் வகுப்பு மற்றும் பதினொன்றாம் வகுப்பு காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளுக்கான விடைத்தாள்கள் கட்டுகளையும், மாணவர்களது காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுக்கான மதிப்பெண் பதிவு செய்யப்பட்டுள்ள அரசின் மதிப்பெண் பதிவேடுகளையும் வரும் ஜூன் 22ஆம் தேதி முதல் 26ஆம் தேதிக்குள் மாவட்ட கல்வி அலுவலர்கள் தெரிவிக்கும் பள்ளியில் ஒப்படைக்க வேண்டும்.

மாணவர்களின் காலாண்டு மற்றும் அரையாண்டு மதிப்பெண்களின் சராசரியின் அடிப்படையில் 80 விழுக்காடு மதிப்பெண்களும், வருகைப்பதிவேட்டின் அடிப்படையில் 20 விழுக்காடு மதிப்பெண்களும் வழங்கப்பட உள்ளன. பள்ளிகள் அளித்த மாணவர்களின் விவரங்களைச் சரிபார்த்து மதிப்பெண்களை இணையதளத்தில், மாவட்ட கல்வி அலுவலர்கள் முகாம்களை அமைத்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.

அதேபோல் காலாண்டு, அரையாண்டுத் தேர்வுக்கான விடைத்தாள்கள், மாணவர்களுக்கு முன்னேற்ற அறிக்கைகள், மதிப்பெண் பதிவேடுகள் இல்லாத பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் வழங்கும் விளக்கக் கடிதங்களை பெற்றுக்கொள்ள வேண்டும்.

இந்த விவரங்கள் இல்லாத பள்ளிகளின் பட்டியலை முதன்மை கல்வி அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும். இதைத்தொடர்ந்து பத்தாம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கு தனித்தனியாக மதிப்பெண் சரிபார்க்கும் அலுவலர்கள், அட்டவணையாளர்கள் நியமனம் செய்ய வேண்டும்.

மதிப்பெண் சரிபார்க்கும் அலுவலர்கள், அட்டவணை ஆய்வாளர்கள் வரும் ஜூன் 23ஆம் தேதி முதல் தங்களிடம் வழங்கப்பட்ட விடைத்தாள் கட்டுகளை பிரித்து விடைத்தாள் கட்டுகளின் மீது எழுதப்பட்டுள்ள விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும்.

மேலும் மாணவர்களின் மதிப்பெண்களை ஜூன் மாதம் 29ஆம் தேதி முதல் ஜூலை மாதம் 8ஆம் தேதிக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்' என அதில் கூறியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.