ETV Bharat / state

"சனாதன தர்மம் எந்தவொரு பாகுபாட்டையும் ஆதரிக்காது" - ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு - ஆளுநர் ஆர் என் ரவி

Tamil nadu Governor Rn Ravi: சனாதன தர்மம், எந்தவொரு பாகுபாட்டையும் ஒருபோதும் ஆதரிக்கவோ அல்லது பொறுத்துக்கொள்ளவோ செய்யாது. அது குறித்து தவறாக புரிந்து கொள்பவர்கள் குறித்து எனக்கு கவலையில்லை என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 5, 2023, 11:01 PM IST

சென்னை: ராஜ் பவனில் இன்று (அக்.05) திருவருட்பிரகாச வள்ளலாரின் திருவுருவச் சிலை திறப்பு மற்றும் அவரது பிறந்த நாள் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை வகித்தார். மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

திருவருட்பிரகாச வள்ளலாரின் திருவுருவச் சிலை திறப்பு

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசும் போது, “தெய்வீகம் பொருந்திய மாபெரும் திருவருட்பிரகாச வள்ளலாரின் சிலை, அவரது 200ஆவது பிறந்த நாள் ஆண்டு விழாவில் வைக்கப்பட்டிருப்பதால் ராஜ் பவன் ஆசீர்வதிக்கப்பட்டிருகிறது. பாரதத்தின் எண்ணம், அடையாளத்தை மிக ஆழமாக கூர்மைப்படுத்திய மாபெரும் தெய்வீக ஆன்மாக்களில் புனித வள்ளலாரும் ஒருவர். அவர் யார் என்பது குறித்தும் அவர் நமக்கெல்லாம் என்ன செய்தார் என்பதையும் நம் சமூகம் அறிந்திருக்க வேண்டும்.

'பாரதம்' ஒரு தனித்துவம் வாய்ந்த தேசம் .மேற்கத்திய கருத்தாக்கத்தைப் போல இல்லாமல், ‘பாரதம் ஒரே தேசம் போல இருந்ததை’ அதை நெருங்கி அணுகினால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். காலனித்துவ காலத்தில், மக்கள் தங்களின் சொந்த வேர்களில் இருந்து அறிவுபூர்வமாக அகற்றப்பட்டு, ஆங்கிலேயர்கள் எப்படி நம் நாட்டைப் பார்த்தார்களோ அதே பார்வையுடன் தேசத்தை அணுகத் தொடங்கியிருந்ததை பாபாசாகேப் அம்பேத்கர் அறிந்திருந்தார்.

அதனால் தான், நமது அரசியலமைப்பின் முதல் விதியில், 'பாரதம்' என்று இந்தியாவை விளக்கினார். 'இந்தியா' என்பது மேற்கத்திய பெயர். பாரதத்தை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வெளிப்பட்ட தரிசனத்தின் அடிப்படையில் நமது எண்ணற்ற ரிஷிகள் மற்றும் சித்தர்களால் உருவாக்கிய 'புனித பூமி' என்று அழைத்தார். படைப்பின் ஒருமை, படைப்பின் ஒவ்வொரு கூறுகளிலும் ஒரே தெய்வீகத்தின் இருப்பு பற்றிய அடிப்படை உண்மை நமது வேதங்களிலும் திருக்குறளிலும் நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

நமது பாரத நெறிமுறைகளில் நன்கு பிரதிபலிக்கும் வெளிப்படை வேறுபாடுகளை நாம் கொண்டிருந்தாலும் ‘வசுதைவ குடும்பகம்’ என்பதற்கேற்ப நாம் ஒரே தெய்வீகத் தன்மையுடன் இணைந்துள்ளோம். இதுபோலவே தமிழில் நாம் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று குறிப்பிடுகிறோம். இதை மொழி மற்றும் வெளிப்படுத்துவதில் நாம் வேறுபட்டிருக்கலாம். ஆனால், மையக்கரு ஒன்றுதான். இந்த தனித்துவமான மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய உலகளாவிய தரிசனம் 'பாரதம்' என்று அழைக்கப்படும் நிலம் முழுவதும் பரவியுள்ளது. நாம் அனைவரும் ஒரே குடும்பத்தின் அங்கம்.

மத அடிப்படையில் 'பெங்கால்' பிரிக்கப்பட்டபோது, எந்த ஒரு ஒருங்கிணைந்த இயக்கமும் இல்லாமல், ஒட்டுமொத்த தேசமும் அதற்கு எதிராக இயல்புடனேயே கிளர்ந்தெழுந்தது. சிறந்த தேசியவாத சுதந்திர போராட்ட வீரரான வ.உ. சிதம்பரம் பிள்ளை கோபமடைந்து கிளர்ச்சி செய்தார். இத்தகைய கூட்டுக் கிளர்ச்சிகளின் விளைவாக, அவர்கள் பிரிவினையை செயல்தவிர்க்க வேண்டியதாயிற்று. ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்தபோது, நமது மாபெரும் தலைவர் கே.காமராஜ் கிளர்ந்தெழுந்தார். நாம் எந்த அளவுக்கு ஆழமாக ஒருங்கிணைக்கப்பட்டோம் என்பதை இவை காட்டுகின்றன” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "வள்ளலாரின் புகழ்பெற்ற வரிகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு சனாதன தர்மம், எந்தவொரு பாகுபாட்டையும் ஒருபோதும் ஆதரிக்கவோ அல்லது பொறுத்துக்கொள்ளவோ செய்யாது. இன்று நாம் நமது சமூகத்தில் மனித பலவீனத்தால் ஏற்பட்ட நோய் போன்ற தூய்மையற்ற நிலையை காண்கிறோம். அதை சரி செய்ய வேண்டும். நமது இத்தகைய பிறழ்வுகளை அடையாளத்தின் ஒரு பகுதியாக ஆக்க முடியாது. அதை சரிசெய்வதற்கான முயற்சிகள், கடந்த காலங்களில் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்டன.

இந்த நாட்டை ஒரு குடும்பமாக பார்க்கும் ஒரு சிறந்த தேசிய தலைவர் நமக்கு இருக்கிறார். இன்று, அனைத்து நலத் திட்டங்களும் ஒவ்வொரு குடிமகனையும், அவர் சார்ந்த அரசியல், பகுதி, மதம் அல்லது சாதி போன்றவற்றுக்கு அப்பாற்பட்டு முழுமையாக சென்றடைகின்றன. இந்த கண்ணோட்டத்துடன், நமது தேசம் பல சவால்களை எதிர்கொண்டு புரட்சிகரமான மாற்றங்களைச் சந்தித்து வருகிறது.

இந்தியா பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பம் போன்ற பல்வேறு துறைகளில் முன்னேறி வருகிறது. ஆனால் ஆன்மிக மறுமலர்ச்சியை உள்ளடக்கிய ஒரு விரிவான எழுச்சியை நாம் பெற வேண்டும், இல்லையெனில் நாம் மேற்குலகை பின்பற்றுபவர்களாகவே இருப்போம். இந்த மகத்தான பொறுப்புகளுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில், ராஜ் பவனில் புனித வள்ளலார் சிலை நிறுவப்பட்டுள்ளது. இச்சிலை நம்மை வழிநடத்தும். நாம் யார், நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை நமக்கு உணர்த்தும்” என பேசினார்.

இந்த விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி திருவருட்பிரகாச வள்ளலார் புத்தகத்தை வெளியிட்டார். விழாவையொட்டி வள்ளலார் குறித்த கிராமியக் கலைஞர்களின் கலாசார நிகழ்ச்சி நடைபெற்றது என ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மதுரையில் இரு கர்ப்பிணிகள் உயிரிழப்புக்கு காரணம் என்ன? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.