சென்னை: பிரபல வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் (வயது 98) வயது மூப்பு காரணமாக கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி சென்னையில் காலமானார். மறைந்த எம்.எஸ் சுவாமிநாதன் உடல் அவரது ஆராய்ச்சி அறக்கட்டளையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தும், அஞ்சலி செலுத்தினர்.
எம்.எஸ் சுவாமிநாதன் உடலுக்கு இன்று (செப். 30) இறுதி சடங்கு நடைபெற்றது. முன்னதாக தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி, எம்.எஸ் சுவாமிநாதன் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும் சுவாமிநாதனின் மகள் சௌமியா சுவாமிநாதனுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
இது குறித்து தமிழ்நாடு, ராஜ்பவன் தனது X தளத்தில், "ஆளுநர் ரவி, இந்திய பசுமைப் புரட்சியின் சிற்பியான மறைந்த டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதனுக்கு சென்னை எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையில் இன்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்" என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
-
ஆளுநர் ரவி அவர்கள், இந்திய பசுமைப் புரட்சியின் சிற்பியான மறைந்த டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதனுக்கு சென்னை எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையில் இன்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். pic.twitter.com/SjQwxdrb1C
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) September 30, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">ஆளுநர் ரவி அவர்கள், இந்திய பசுமைப் புரட்சியின் சிற்பியான மறைந்த டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதனுக்கு சென்னை எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையில் இன்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். pic.twitter.com/SjQwxdrb1C
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) September 30, 2023ஆளுநர் ரவி அவர்கள், இந்திய பசுமைப் புரட்சியின் சிற்பியான மறைந்த டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதனுக்கு சென்னை எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையில் இன்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். pic.twitter.com/SjQwxdrb1C
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) September 30, 2023
இதையும் படிங்க: தண்ணீர் என குளுக்கோஸ் குடிக்கும் குரங்குகள்..! அரசு சுகாதார நிலையத்தின் அலட்சியத்தால் அவலம்!
பின்னர், அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு நேரில் சென்று ஆஞ்சலி செலுத்தினார். பின்னர், எம்.எஸ் சுவாமிநாதன் மகள் மற்றும் உறவினர்களுக்கு தனது அறுதலை தெரிவித்தார்.
முன்னதாக பசுமை புரட்சியின் தந்தை மறைந்த எம்எஸ் சுவாமிநாதன் உடலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். இன்றைய தினம் எம்.எஸ் சுவாமிநாதன் உடலுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.
இதையும் படிங்க: தனியார் மருத்துவமனையில் கல்லூரி மாணவி பலி! முறையற்ற சிகிச்சை காரணமா? பெற்றோர் தர்ணா!