ETV Bharat / state

தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளைக் காயப்படுத்தும் ஆளுநர் - திருமா

author img

By

Published : Feb 7, 2022, 6:33 AM IST

ஆளுநர் நீட் தேர்வு குறித்த கோப்புகளை நிராகரித்து மீண்டும் அனுப்பியது தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளைக் காயப்படுத்தும் நடவடிக்கை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை ஆளுநர் காயப்படுத்துகிறார்..! - திருமாவளவன்

சென்னை: தாம்பரம் அடுத்த நெடுங்குன்றம் ஊராட்சிக்குள்பட்ட பகுதியில் 10 ஆண்டுகளாக 40 லட்சம் ரூபாய் செலவில் திருநங்கை லோகேஸ்வரி நாயக் என்பவரால் கட்டப்பட்ட ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலயத்தின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் கோயில் கலசங்களுக்குத் தனது கைகளால் ஆரத்தி எடுத்த பின்பு புனித நீரூற்றி குடமுழுக்கு செய்து அம்மனை வழிபட்டார்.

இதில் பல மாவட்டங்களிலிருந்து 100-க்கும் மேற்பட்ட திருநங்கைகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர். பின்னர் செய்தியாளருக்குப் பேட்டியளித்த திருமாவளவன் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றுவரும் நிலையில் நீட் தேர்வு குறித்த கோப்புகளை ஆளுநர் திருப்பி அனுப்பியது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு,

தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளைக் காயப்படுத்தும் ஆளுநர்

”நிறைவேற்றப்பட்ட மசோதாவில் ஏதேனும் திருத்தம் வேண்டும் என்றால் மீண்டும் மாநில அரசுக்கு அனுப்பிவைத்திருக்கலாம். ஆனால் ஆளுநர் திருப்பி அனுப்பாமல் நிராகரித்துள்ளார்.

இது அதிகார வரம்புக்கு மீறிய செயல். ஆளுநரால் எடுக்கப்பட்ட இந்த முடிவு தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளைக் காயப்படுத்தும் நடவடிக்கை, வரும் 8ஆம் தேதி சட்டப்பேரவைச் சிறப்புக் கூட்டம் நடைபெற உள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் முடிவுசெய்துள்ளார்.

அந்தக் கூட்டத்தில் மீண்டும் அதே மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பிவைப்பதை தமிழ்நாடு அரசு முடிவுசெய்ததற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வரவேற்றுப் பாராட்டுகிறது.

ஆளுநரைத் திருப்பப் பெற வேண்டும் என்று எல்லோரும் கூறினாலும் மீண்டும் மத்திய அரசின் முகவராக இன்னொருவர் வருவார், அவரும் சுதந்திரமாகச் செயல்பட வாய்ப்பில்லை. ஆனாலும் ஆளுநர் பதவியே தேவையில்லை என்பது எனது கருத்து” என்றார்.

இதையும் படிங்க:சுவாமி விவேகானந்தருக்கு மரியாதை செலுத்திய ஆளுநர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.