ETV Bharat / state

'மேக் இன் இந்தியா' தொழில்முனைவோர்களுடன் ஆளுநர் ஆர்.என். ரவி சந்திப்பு - தமிழ்நாடு

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி ‘மேக் இன் இந்தியா’ தொழில்முனைவோர்களுடன் கலந்துரையாடினர்.

மேக் இன் இந்தியா தொழில்முனைவோர்களுடன் ஆளுநர் சந்திப்பு

author img

By

Published : Dec 21, 2022, 8:48 AM IST

Updated : Dec 21, 2022, 9:46 AM IST

சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி நேற்று (டிசம்பர் 20) Ippo Pay Tech தலைமை செயல் அதிகாரி -மோகன் கருப்பையா, FaceTagr தலைமை செயல் அதிகாரி விஜய் ஞானதேசிகன், Suxus Menswear தலைமை செயல் அதிகாரி பைசல் அகமது, டெர்பி தலைமை செயல் அதிகாரி விஜய் கபூர் ஆகியோர் ஆளுநருடன் கலந்துரையாடினார்.

மோகன் கருப்பையா கலந்துரையாடலின் போது, 'ஸ்டார்ட்அப்' முயற்சிகளில் ஏழு முறை தோல்வியை சந்தித்தாகவும், பின்னர் Ippo Pay Tech மூலம் கடைசியில் வெற்றி பெற்றது குறித்து தமது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். ஆளுநர் அவரது விடாமுயற்சியைப் பாராட்டி, "இன்றைய இளைஞர்கள் ஆற்றல் மிக்கவர்களாகவும் உறுதிப்பாடு மிக்கவர்களாகவும் உள்ளனர் என்று கூறினார்.

ஃபைசல் அகமது பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பை எதிர்கொண்டு, போட்டி நிறைந்த ஆடைத் துறையில் தனது வர்த்தக பிராண்டை எப்படி வெற்றிகரமாக நிலை நிறுத்தினார் என்பதையும், தமது தொழில் பயணத்தையும் பகிர்ந்து கொண்டார். அவரது தயாரிப்புகள் டயர் 3, டயர் 4 நகரங்கள் மற்றும் கிராமங்களில் வசிக்கும் அதிகமான மக்களைச் சென்றடைய வேண்டும் என தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி அறிவுறுத்தினார். மேலும் மக்கள் மலிவு விலையில் தரமான ஆடைகளை பெறும் வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்ற தமது எண்ணத்தையும் அவரிடம் ஆளுநர் வெளிப்படுத்தினார்.

விஜய் ஞானதேசிகன் தமது “face tagr” தொழில்நுட்பம் குறித்தும்,, . மேற்கு ரயில்வேயுடன் கூட்டு சேர்ந்ததன் மூலம் குழந்தை கடத்தல் வழக்குகள் 40 சதவீதமாக குறைய தமது தொழில்நுட்பம் உதவியையும் ஆளுநரிடம் விவரித்தார். சமீபத்திய ஆண்டுகளில் இந்திய உள்பாதுகாப்பை நவீன தொழில்நுட்பம் எவ்வாறு மேம்படுத்தியது என்பது பற்றி ஆளுநர் அவரிடம் பகிர்ந்து கொண்டார்.

விஜய் கபூர் நீடித்த ஆடைகளின் பயன்கள் குறித்தும், அண்டை நாடுகளுடன் ஒப்பிடும்போது ஜவுளி உற்பத்தியில் இந்தியா முன்னேறி வருவதாகவும், பல தொழில்முனைவோரை உருவாக்கும் தமது நோக்கம் குறித்தும் விளக்கினார். ஆடைத் துறையில் சமீபத்திய கண்டுபிடிப்புகள் குறித்து அவரிடம் ஆளுநர் ரவி கேட்டறிந்தார்.

இனி வரும் காலங்களில் சென்னை ராஜ்பவனில் பல்வேறு தரப்பினருடன் இதுபோன்ற கலந்துரையாடல் நிகழ்வுகள் தொடர்ந்து நடத்தப்படும். பல்வேறு தொழில்கள் மற்றும் துறைகளைச் சேர்ந்த இளைஞர்கள், திறமையானவர்கள் மற்றும் சாதனையாளர்கள் தங்கள் அனுபவங்களையும், அறிவையும் பகிர்ந்து கொள்ளும் வகையில், இதுபோன்ற கலந்துரையாடல்களை நடத்த ஆளுநர் விருப்பம் தெரிவித்துள்ளதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: ஐ.ஐ.டி மெட்ராஸுடன் இணைந்து தனியார் நிறுவனம் மின்சார பேட்டரி தயாரிப்பு

Last Updated : Dec 21, 2022, 9:46 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.