ETV Bharat / state

'முதுநிலை மருத்துவப் படிப்பு நுழைவுத் தேர்வு நடத்தும் அதிகாரத்தை மாநில அரசுகளுக்கே வழங்கிட வேண்டும்'

author img

By

Published : Jun 12, 2021, 7:51 AM IST

Updated : Jun 12, 2021, 8:52 AM IST

முதுநிலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு மற்றும் மாணவர் சேர்க்கை நடத்தும் அதிகாரத்தை முழுமையாக மாநில அரசுகளுக்கே வழங்கிட வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் கூறிவருகிறார்.

'முதுநிலை மருத்துவப் படிப்பு நுழைவுத் தேர்வு நடத்தும் அதிகாரத்தை மாநில அரசுகளுக்கே வழங்கிட வேண்டும்'
'முதுநிலை மருத்துவப் படிப்பு நுழைவுத் தேர்வு நடத்தும் அதிகாரத்தை மாநில அரசுகளுக்கே வழங்கிட வேண்டும்'

முதுநிலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு மற்றும் மாணவர் சேர்க்கை நடத்தும் அதிகாரத்தை முழுமையாக மாநில அரசுகளுக்கே வழங்கிட வேண்டும் எனவும், ஒன்றிய அரசு இவற்றில் தலையிடக் கூடாது எனவும் சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளரும் மருத்துவரும் ஜி.ஆர்.ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் மருத்துவர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் விடுத்துள்ள அறிக்கையில், 'இந்தியாவில் உள்ள 435 மருத்துவக் கல்லூரிகளில் 41,000 மருத்துவ பட்ட மேற்படிப்பு இடங்களும், 500 தனியார் மருத்துவ நிறுவனங்களில் 9700 மருத்துவ பட்ட மேற்படிப்பு (டி.என்.பி) இடங்களும் உள்ளன.

மருத்துவர் ஜி.ஆர்.ரவீந்திரநாத்
  • இவ்விடங்களில் சேர்ந்திட, முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு (NEET PG) ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் இரண்டாவது வாரம் நடைபெறும். இவ்வாண்டும் ஜனவரி மாதம் 10ஆம் தேதி நடத்திட திட்டமிடப்பட்டிருந்தது. அப்போது கரோனா தொற்று குறைவாக இருந்தபோதிலும் இத்தேர்வு அவசியமின்றி தள்ளி வைக்கப்பட்டது. ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
  • இந்நிலையில், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பரவத் தொடங்கியது. இதைக் காரணம் காட்டி , ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி நடக்கவிருந்த நீட் நுழைவுத் தேர்வு மீண்டும் தள்ளி வைக்கப்பட்டது.
  • ஏறத்தாழ 1.6 லட்சம் மருத்துவர்கள் இந்த முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வை (NEET PG) எழுதி, ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட முதுநிலை மருத்துவப் படிப்பு இடங்களில் சேர்ந்திடத் தயாராக இருந்தனர். ஜனவரி மாதத்திலேயே தேர்வை நடத்தி, மே மாதம் கல்லூரியில் சேர்த்திருக்கலாம்.
  • அதன் மூலம் கரோனா போருக்காக 50 ஆயிரம் இளம் மருத்துவர்களைப் பெற்றிருக்க முடியும். அதைச் செய்யவில்லை. ஏப்ரல் 18ஆம் தேதியாவது தேர்வை நடத்தியிருக்கலாம். அதையும் செய்யவில்லை. ஒன்றிய அரசின் நிர்வாகத் திறனின்மையும், தொலைநோக்குப் பார்வை இன்மையுமே இந்த அவல நிலைமைகளுக்குக் காரணம்.
  • அந்நிலை தொடர்கிறது. தமிழ்நாட்டில் ஏறத்தாழ 2000 முதலாம் ஆண்டு முதுநிலை மருத்துவர்களை பணியில் ஈடுபடுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுக்கு பட்ட மேற்படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வை நடத்தும் உரிமையும், மாணவர் சேர்க்கையை நடத்தும் அதிகாரமும் இருந்திருந்தால், இப்பொழுது நாம் இந்த 2000 மருத்துவர்களின் சேவையையும் பயன்படுத்திக் கொண்டிருக்க முடியும்.

    எனவே, மேலும் காலதாமதம் செய்யாமல், முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வை ஒன்றிய அரசு உடனடியாக நடத்தி, முதுநிலை மருத்துவ முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கையை விரைவுபடுத்த வேண்டும். அதன் மூலம் முதலாமாண்டு மருத்துவ மாணவர்களை, கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் மருத்துவர்கள் பற்றாக்குறையை போக்கும் வகையில் பயன்படுத்திக் கொள்ளமுடியும்.

    மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள பட்ட மேற்படிப்பு மருத்துவ இடங்களுக்கு ஒன்றிய அரசு நுழைவுத் தேர்வை நடத்துவது மாநில உரிமைகளுக்கு எதிராக உள்ளது.
  • எனவே, மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள பட்ட மேற்படிப்பு இடங்களுக்கு, மாநில அரசுகளே நுழைவுத் தேர்வுகளை நடத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும். இதுதான் பெருந்தொற்று, இயற்கைப் பேரிடர் போன்ற காலகட்டங்களில் சிக்கலை உருவாக்காது. மாநிலங்கள் தங்கள் வசதிக்கேற்ப உகந்த சூழலில் நுழைவுத்தேர்வை நடத்திக் கொள்ள வழிவகுக்கும்.

    தமிழ்நாடு அரசு செய்ய வேண்டியது என்ன?
  • தமிழ்நாட்டில் கரோனா தொற்று குறைந்துள்ளதால், இறுதி ஆண்டு முதுநிலை மருத்துவப்படிப்பை முடித்த மருத்துவ மாணவர்களுக்கு உடனடியாக பல்கலைக் கழகத் தேர்வை நடத்திட வேண்டும்.
  • அவர்களுக்கு தேர்வை நடத்தாமல் மேலும் காலம் கடத்துவது சரியல்லை. கேரளம், ஒடிசா,மகாராஷ்டிரா போன்ற மாநிலங்கள் முதுநிலை மருத்துவ இறுதி ஆண்டு மாணவர்களுக்கான தேர்வுகளை அறிவித்துவிட்டன. அவர்களின் தேர்வுகள் மேலும், காலதாமதப்படுத்தப் பட்டால், அவர்களது கல்வி ஆண்டு மிகவும் நீட்டிக்கப்படும். மேலும் அது அவர்கள் உயர் சிறப்பு மருத்துவப் படிப்பிற்கான நுழைவுத் தேர்வை இந்த ஆண்டு எழுத முடியாத நிலையை ஏற்படுத்திவிடும்.
  • ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரி, இதர அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக் கழகத்தின் கீழ் வரும் மருத்துவ மாணவர்களுக்கும் பல்கலைக்கழகத் தேர்வுகளை நடத்திட வேண்டும்.

    இரண்டாம் , மூன்றாம் ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கும், பல்கலைக்கழகத் தேர்வுகளை நடத்திட வேண்டும்.
  • தேர்வில் தோல்வி அடைந்து உள்ள மூன்றாம் ஆண்டு மற்றும் இறுதி ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கு, உடனடியாக துணைத் தேர்வுகளை நடத்திட வேண்டும்.
  • முதலாம் ஆண்டு தேர்வில் தேர்ச்சி பெறாத மருத்துவ மாணவர்களுக்கு நடத்தப்பட்டு வந்த துணைத்தேர்வுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அத்தேர்வுகளையும் நடத்த வேண்டும். அதுவரை அவர்களுக்கு இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்ள அனுமதிக்க வேண்டும்.
  • மருத்துவக் கல்வித் தேர்வில், இறுதி ஆண்டிலும் உள்ள பிரேக் சிஸ்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
  • பல் மருத்துவப் படிப்பில் அனைத்து நிலையிலும் உள்ள பிரேக் சிஸ்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
  • ராஜா முத்தையா மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் முதலாம் ஆண்டை முடித்து தேர்வை எழுதாமல் உள்ள மாணவர்களுக்கு ,
    இரண்டாம் ஆண்டு வகுப்புகளை ஆன்லைன் மூலம் உடனடியாக தொடங்கிட வேண்டும்' என தமிழ்நாடு அரசை சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.

இதையும் படிங்க: அரசாணை போட்டு ஏமாற்றி விடலாம் என கருத வேண்டாம் - மருத்துவர் ரவீந்திரநாத்

Last Updated : Jun 12, 2021, 8:52 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.