ETV Bharat / state

சென்னையில் டாஸ்மாக் திறக்கப்படாது - தமிழ்நாடு அரசு! - அரசு மதுபானக் கடை

சென்னையில் அரசு மதுமானக் கடைகள் திறக்கப்படாது என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Chennai wine Shop close  சென்னை மதுக்கடை மூடல்  Government liquor stores will not open in Chennai  Government liquor shops  அரசு மதுபானக் கடை  சென்னையில் அரசு மதுபானக் கடைகள் திறக்கப்படாது
Chennai wine Shop close
author img

By

Published : May 5, 2020, 4:31 PM IST

Updated : May 5, 2020, 7:03 PM IST

கரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பிறப்பித்திருந்த ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகளை மாநில அரசு அவ்வப்போது வழங்கி வருகிறது. மத்திய அரசின் ஊரடங்கு உத்தரவு மே 4ஆம் தேதி முதல் மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் மதுபானக்கடைகள், சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு திறக்க அனுமதி அளித்துள்ளது.

எனினும் மதுபானக்கூடங்கள் திறப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில், தமிழ்நாட்டை ஒட்டியுள்ள கர்நாடகா, ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களில் மதுபானக் கடைகளை திறக்க ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனால், தமிழ்நாட்டை ஒட்டியுள்ள ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் உள்ள மதுக்கடைகளுக்கு தமிழ்நாடு எல்லைப்பகுதியில் உள்ள மக்கள் அதிக அளவில் செல்வதால், மாநிலங்களுக்கு இடையேயான மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது.

இவற்றை கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டிலும் மதுபானக்கடைகளை வரும் 7ஆம் தேதி முதல் திறக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. எனினும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளிலுள்ள மதுபானக்கடைகள் திறக்கப்படமாட்டாது. நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு வெளியே உள்ள மதுபானக்கடைகள் மட்டும் கீழ்க்கண்ட நிபந்தனைகளுக்குட்பட்டு திறக்க அனுமதிக்கப்படுகிறது.

1. மதுபானக்கடைகளில் கூட்டம் கூடுவது தவிர்க்கப்படவேண்டும்.

2.ஒரு நபருக்கும் இன்னொரு நபருக்கும் உள்ள இடைவெளி ஆறு அடி தூரமாக பராமரிக்கப்பட வேண்டும்.

3.மதுபானக்கடைகளில் ஒரே நேரத்தில் ஐந்து நபர்களுக்கு மேல் கூடுவதற்கு அனுமதிக்கக்கூடாது.

4.மதுபானக்கடைகள் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மட்டுமே திறக்க அனுமதிக்கப்படுகிறது.

5.அனைத்து மதுபானக்கடைகளிலும் தேவைக்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும்.

6.ஒவ்வொரு மதுபானக்கடையிலும் தேவைக்கேற்ப கூடுதல் நபர்களை பணியமர்த்தி கூட்டம் சேர்வதைத் தவிர்க்க வேண்டும்.

Chennai wine Shop close  சென்னை மதுக்கடை மூடல்  Government liquor stores will not open in Chennai  Government liquor shops  அரசு மதுபானக் கடை  சென்னையில் அரசு மதுபானக் கடைகள் திறக்கப்படாது
அரசு அறிக்கை

மேற்கண்ட நிபந்தனைகளுக்குட்பட்டு தமிழ்நாட்டில் மதுபானக் கடைகள் இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது. எனினும், மதுபானக்கூடங்கள் திறப்பதற்கு அனுமதி இல்லை. இந்நிலையில் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் சென்னை மாநகரக் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில்அமைந்துள்ள அரசு மதுபானக் கடைகள் மே 7ஆம் தேதி திறக்கப்படமாட்டாது, இந்தக் கடைகள் திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க:டாஸ்மாக் ஊழியர்களை மிரட்டி ரூ. 3.90 லட்சம் கொள்ளை

Last Updated : May 5, 2020, 7:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.