ETV Bharat / state

வேளாண் கடனில் பயன்பெறுவோர் யார்? - அரசு விளக்கம்

ஒன்றிய அரசின் வேளாண் உட்கட்டமைப்பு நிதியின் கீழ் வட்டி, மானியத்துடன் ரூ.2 கோடி வரை கடன் வசதி பெறும் திட்டத்தில் யார் பயன்பெற முடியும் என தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.

வேளாண் கடனில் பயன்பெறுவோர் யார்? - அரசு விளக்கம்
வேளாண் கடனில் பயன்பெறுவோர் யார்? - அரசு விளக்கம்
author img

By

Published : Oct 29, 2021, 7:38 PM IST

சென்னை: ஒன்றிய அரசின் வேளாண் உட்கட்டமைப்பு நிதியின் கீழ் வட்டி, மானியத்துடன் ரூ.2 கோடி வரை அரசால் கடன் வசதி ஏற்படுத்தி தரப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் யாரெல்லாம் பயனடைவர் என்பது குறித்து வேளாண் உற்பத்தி ஆணையர் விளக்கமளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், “விவசாயிகள் உற்பத்தி செய்த விளைபொருட்களை ஒன்றுசேர்ந்து மதிப்புக்கூட்டி லாபகரமான விலை கிடைப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்கு வேளாண் கிடங்குகள், தரம் பிரிப்பு மையங்கள், குளிர்சாதனக் கிடங்குகள் போன்ற உள்கட்டமைப்புகளை வலுப்படுத்துவது மிகவும் அவசியமாகும். இதற்காக பல்வேறு திட்டங்களில் கீழ் ஒன்றிய, மாநில அரசுகள் மானியம் வழங்கி வருகின்றன.

உட்கட்டமைப்பு உருவாக்கலின் வகைகள்

ஆகையால் விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் ஆகியோருக்கு வேளாண் உட்கட்டமைப்புக்கான நிதி திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசு கடனுதவி அறிவித்துள்ளது.

இந்த திட்டமானது வட்டி, மானியத்துடன் கூடிய கடனுதவி திட்டமாகும். இதன் மூலம் மின்னணு சந்தையுடன் கூடிய விநியோக தொடர் சேவை, சேமிப்பு கிடங்குகள், சேமிப்பு கலன்கள், சிப்பம் கட்டும் கூடங்கள், விளைபொருட்களின் தரத்தை மதிப்பிடுவதற்கான அமைப்புகள் போன்றவற்றை உருவாக்கலாம்.

இதே போல் தரம் பிரித்து வகைப்படுத்தும் இயந்திரங்கள், குளிர்பதன வசதிகள், போக்குவரத்து வசதிகள் முதன்மை பதப்படுத்தும் மையங்கள், பழங்களை அறிவியல் ரீதியாக பழுக்க வைக்கும் அறைகள் போன்ற அறுவடைக்குப் பின் மேலாண்மைக்கான உட்கட்டமைப்புகளையும் உருவாக்கலாம்.

மேலும் விவசாயிகள் குழுக்களாக இணைந்து வேளாண்மை இயந்திர வாடகை மையம் தொடக்கம், சூரிய சக்தி மோட்டார் அமைப்பு, இயற்கை இடுபொருட்கள் உற்பத்தி, நுண்ணுயிர் உற்பத்தி நிலையங்கள், நவீன, துல்லிய பண்ணையத்திற்கான உட்கட்டமைப்புகள், பகுதிக்கேற்ற பயிர் தொகுப்புகளை உருவாக்கி ஏற்றுமதி செய்வதற்கான வசதிகள் உள்ளிட்டவற்றுக்கு இத்திட்டத்தின் கீழ் கடன் வசதி பெற முடியும்.

எவ்வளவு கடன் பெற முடியும்?

இந்நிதியின் கீழ் அதிகபட்சமாக ரூ.2 கோடி வரை கடன் பெறலாம். வங்கிகள் விதிக்கும் வட்டி வீதத்தில் ஏழு ஆண்டு காலத்திற்கு ஆண்டிற்கு மூன்று சதவீதம் வரை வட்டி தள்ளுபடி செய்யப்படும். ரூ. 2 கோடிக்கு மேல் கடன் பெறுவோருக்கு அந்த தொகைக்கு மட்டும் 3 சதவீத வட்டி தள்ளுபடி செய்யப்படும். மேலும் ரூ.2 கோடி வரை உள்ள கடன்களுக்கான கடன் உத்தரவாதமும் வழங்கப்படுகிறது.

யார் பயன்பெற முடியும்?

விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் (Farmer Producer Organizations), சுயஉதவிக் குழுக்கள் (Self Help Groups), கூட்டுப் பொறுப்புக்குழுக்கள் (Joint Liability Groups), தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன்சங்கங்கள் (PACCS), விற்பனைக் கூட்டுறவு சங்கங்கள் (Marketing Cooperative Societies), வேளாண் தொழில்முனைவோர் (Agri Entreprenuers), புதியதாக தொழில் தொடங்க முன்வரும் நிறுவனங்கள் (Start ups) ஆகியோர் கடனுதவியை பெறலாம்.

மேலும் ஒன்றிய, மாநில அமைப்புகள் அல்லது உள்ளாட்சி அமைப்புகளால் முன்மொழியப்படும் அரசு, தனியார் அமைப்புகள், மாநில முகமைகள் / வேளாண் விளைபொருட்கள் விற்பனைக்குழுமங்கள் (APMCs), தேசிய மற்றும் மாநில கூட்டுறவு சங்கங்களின் கூட்டமைப்புகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் கூட்டமைப்புகள், சுய உதவிக் குழுக்களின் கூட்டமைப்புகள் ஆகியவையும் கடனுதவி பெறலாம்.

தகுதியுடைய பயனாளி அல்லது நிறுவனமானது தனியார் அமைப்பை சார்ந்திருந்தால், அதிகபட்சமாக 25 வேறுபட்ட இடங்களில் வேளாண் உட்கட்டமைப்பை ஏற்படுத்த கடன் வசதி பெறலாம். மாநில முகமைகள், தேசிய மற்றும் மாநில கூட்டுறவு கூட்டமைப்புகள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புக்கள், சுய உதவி குழுக்களின் கூட்டமைப்புகளுக்கு இந்தக் கட்டுப்பாடு இல்லை.

இணையதள முகவரி வெளியீடு

இதனை வேளாண் விளைபொருட்கள் விற்பனைக் குழுக்கள் (APMC), ஒன்றுக்கு மேற்பட்ட உட்கட்டமைப்புகளுக்கான திட்டங்கள், அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் செயல்படுத்தலாம். ஒவ்வொரு திட்டத்திற்கும் அதிகபட்சமாக ரூ. 2 கோடி வரை கடன் வசதி பெற முடியும்.

இத்தகைய கடன் தொகையை வழங்க அகில இந்திய அளவில் 25 பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகள் ஒன்றிய அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன. அதன்படி கடனுக்கான வட்டி வீதம் அதிகபட்சமாக ஆண்டுக்கு ஒன்பது சதவீதம் மட்டுமே ஆகும்.

இது குறித்த கூடுதல் விவரங்களை https://agriinfra.dac.gov.in என்ற இணையதள முகவரியின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.தமிழ்நாட்டில் 2020-2021 முதல் 2032-33 வரையிலும் ரூ.5 ஆயிரத்து 990 கோடி அளவுக்கு கடன் வசதி தர திட்டமிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் அரசின் பல்வேறு திட்டங்களின் மானியத்தையும் இணைந்தே பெற்றுக் கொள்ளும் வசதி உள்ளது. கடன் வசதியை பெற விரும்பும் நபர்கள் திட்ட விவரங்களுடன், அருகில் உள்ள வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் விற்பனை, வேளாண் பொறியியல் துறை அலுவலர்கள், வங்கி மேலாளர்கள் அல்லது நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி மேலாளர்களை தொடர்பு கொள்ளலாம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது' - துரைமுருகன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.