சென்னை பல்லாவரம் நாகல்கேனி பகுதியைச் சேர்ந்தவர்கள் கோட்டையா, ஆதிகேசவன். இருவரும் பல்லாவரம் நகராட்சி அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர்களாக இருந்து வருகின்றனர். இன்று(ஏப்.10) காலையில் இருவரும் வழக்கம்போல் வேலைக்கு வந்த்துள்ளனர்.
அப்போது, பிளாஸ்டிக் கழிவுகளைப் பிரித்து நகராட்சி வாகனத்தில் ஏற்றுவது தொடர்பாக இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆதிகேசவன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கோட்டையாவின் இடப்பக்க பின் முதுகில் குத்திவிட்டு தப்பியோடி தலைமறைவாகியுள்ளார்.
இதனைக் கண்ட சக ஊழியர்கள், கோட்டையாவை அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து, குரோம்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான ஆதிகேசவனை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க : 'சாதியத்தை அறுத்தெறிந்த கர்ணனின் வாள்' - அடுத்தடுத்து குவியும் பாராட்டுகள்