ETV Bharat / state

‘மாற்றுத்திறனாளிகளுக்கு 81,000 சிறப்பு முகக்கவசங்கள் வழங்கப்படும்’ - தமிழ்நாடு அரசு - government announces special masks for differently abled

சென்னை: செவித்திறன் குறையுடையோர் தகவல் பரிமாற்றத்திற்கு ஏதுவான உதடு மறைவற்ற 81,000 முகக்கவசங்கள் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

முதலமைச்சர்
முதலமைச்சர்
author img

By

Published : May 16, 2020, 11:36 PM IST

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாட்டில் கரோன வைரஸ் தொற்று மேலும் பரவாமல் தடுக்கும் பொருட்டு அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காலத்தில், மாற்றுத்திறனாளிகளைப் பாதுகாக்கும் வண்ணம் அவர்களின் அன்றாடத் தேவைகளை மாவட்ட அளவில் ஒருங்கிணைந்த வகையில், வழங்கிட பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

அதனை தொடர்ந்து, செவித்திறன் பாதிக்கப்பட்ட மற்றும் வாய்பேச இயலாத மாற்றுத்திறனாளிகளுடன் பெற்றோர், பாதுகாவலர், பயிற்சியாளர்கள், உடன்பணிபுரிபவர்கள் உரையாடும் சமயம், முகத்தின் உதட்டசைவு மூலம் தகவல் பரிமாற்றம் மேற்கொள்ளும் வகையில் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட உதடு மறைவற்ற முகக்கவசங்கள் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலகங்கள் மூலம் செவித்திறன் பாதிக்கப்பட்ட மற்றும் வாய்பேச இயலாத மாற்றுத்திறனாளிகள், காதுகேளாத ஆரம்ப நிலை பயிற்சி மையத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள், காதுகேளாத சிறப்பு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள், மாற்றுத்திறனாளிகளின் பெற்றோர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள், அவர்களுடன் பணிபுரிபவர்கள் மற்றும் மேலாளர் ஆகியோர்களுக்கு வழங்கும் விதமாக திட்டமிடப்பட்டு தமிழ்நாட்டில் முதன் முதலாக அறிமுகப்படுத்தப்படுகின்றது.

இதன் மூலம் காதுகேளாத நபர்கள் பிறருடன் தகவல் பரிமாற்றம் செய்யும் போது பிறரின் உதடு அசைவு மூலம் உரையாடலை தெளிவாக அறிவதற்கு மிகுந்த பயன் உள்ளதாக அமையும். இத்திட்டத்தின் மூலம் ரூபாய். 12.15 லட்சம் செலவில் 13,500 செவித்திறன் பாதிக்கப்பட்ட மற்றும் வாய்பேச இயலாத மாற்றுத்திறனாளிகளுக்கு 81,000 எண்ணிக்கையிலான உதடு மறைவற்ற முகக்கவசங்கள் வழங்கப்படுகின்றன” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.