ETV Bharat / state

முதலமைச்சரின் "ஆராய்ச்சி ஊக்கத்தொகை திட்டம்": அரசாணை வெளியீடு

author img

By

Published : Mar 2, 2023, 12:54 PM IST

மாணவர்களின் திறமைகளை ஊக்குவிக்கும் விதமாக முதலமைச்சரின் "ஆராய்ச்சி ஊக்கத்தொகை திட்டம்" தொடங்கப்பட்ட நிலையில், தற்போது அதற்கான ஊக்கத்தொகை அறிவிப்பு அரசாணை வெளியாகியுள்ளது.

முதலமைச்சரின் ஆராய்ச்சி ஊக்கத்தொகை திட்டம்

சென்னை: ஆராய்ச்சி, திறமைகள் மற்றும் கண்டுபிடிப்புகளை மேம்படுத்தும் வகையில் முதலமைச்சரின் "ஆராய்ச்சி ஊக்கத்தொகை திட்டம்" தொடங்கப்பட்டது. தற்போது இந்த திட்டத்திற்கு சுமார் 12 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன் மூலம் மூன்றாண்டு காலத்திற்குள் சுமார் 100 மாணவர்களுக்கு கலை, சமூக அறிவியல், மானுடவியல் ஆகிய துறைகளில் ஆராய்ச்சிக்கு ஊக்கத்தொகை வழங்கப்படவுள்ளது.

இதற்கான மாணவர்களுக்கு 100 மதிப்பெண்களுக்கு நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு, அதன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இது குறித்து உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அரசாணையில், "தமிழக மாணவர்களின் ஆராய்ச்சி திறமைகள் மற்றும் கண்டுபிடிப்புகளை மேம்படுத்த இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் முதலமைச்சருடன் நடைபெற்ற பல்கலைக்கழக துணைவேந்தர்கள் ஆலோசனை கூட்டத்தின் போது, மாணவர்களின் ஆராய்ச்சி திறமையை மேம்படுத்தவும், புதியக் கண்டுபிடிப்புகளைத் தமிழ்நாட்டில் ஊக்கப்படுத்தவும் முதலமைச்சரின் "ஆராய்ச்சி ஊக்கத்தொகைத் திட்டம்" தொடங்கப்பட்டது.

இதற்காக மாநில அளவில் தகுதித்திட்ட தேர்வு நடத்தப்பட்டு, மாணவர்கள் தேர்வுச் செய்யப்படுவார்கள் என அறிவித்திருந்தார். இந்த திட்டத்திற்கு தமிழ்நாட்டை பூர்விகமாக கொண்ட மாணவர்கள், முதுகலைப் பட்டபடிப்பில் அங்கீகாரம் பெற்ற மாணவர்கள் கல்வி நிறுவனத்தில் எந்த பிரிவில் படித்தாலும் விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் முன்னுரிமை அளித்து உதவித்தொகை வழங்கப்படும்" என குறிப்பிடப் பட்டிருந்தது. மேலும் இந்த தேர்விற்கான முறையையும், தேர்வு செய்வதற்கான குழுவும் அமைத்து உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: பிஎச்டி மாணவிக்கு பாலியல் தொல்லை: முதலமைச்சரிடம் சென்ற புகார் கடிதம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.