சென்னை: இலங்கை தலைநகர் கொழும்புவிலிருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அலுவலர்கள் சோதனையிட்டனா்.
அப்போது இலங்கையைச் சேர்ந்த 30 வயது ஆண் பயணி ஒருவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் மேற்கொண்ட சோதனையில், அவருடைய உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த தங்கப்பசை அடங்கிய பார்சலை, கைப்பற்றினார். ரூ 59.35 லட்சம் மதிப்புடைய 1.310 கிலோ தங்க பசையை பறிமுதல் செய்த சுங்கத்துறையினர், இலங்கை பயணியை கைது செய்தனர்.
இந்நிலையில் இலங்கையில் இருந்து வந்த அந்த விமானம், மீண்டும் டெல்லி செல்ல தயாராகிக் கொண்டிருந்தது. அந்த விமானத்தை விமான ஊழியர்கள் சுத்தப்படுத்தும் போது, ஒரு சீட்டுக்கு அடியில் மறைத்து வைத்திருந்த ஒரு பார்சலை கைப்பற்றினார். அந்தப் பார்சலில் ரூ.12.86 லட்சம் மதிப்புடைய 286 கிராம் தங்க பசை இருந்தது. அதையும் பறிமுதல் செய்து கடத்தல் ஆசாமி யார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கு இடையே இலங்கையிலிருந்து சென்னை வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான பயணிகளை சுங்கத்துறை அலுவலர்கள் சோதனையிட்டனா். அப்போது இலங்கையைச் சேர்ந்த 26 வயது ஆண் பயணி ஒருவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி சோதித்த போது, அவருடைய உள்ளாடைகளுக்குள் மறைத்து வைத்திருந்த ரூ.17.59 லட்சம் மதிப்புடைய 395 கிராம் தங்கப் பசையை கைப்பற்றினர். இதை எடுத்து அந்த இலங்கை பயனியையும் கைது செய்து செய்தனர்.
இதை அடுத்து இலங்கையில் இருந்து மற்றொரு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானம் மீண்டும் சென்னையில் இருந்து உள்நாட்டு விமானமாக, ஹைதராபாத் புறப்பட தயாராகி உள்ளது. அந்த விமானத்தை விமான ஊழியா்கள் சுத்தப்படுத்தினார். அப்போது விமானத்திற்குள் ஒரு சீட்டுக்கு அடியில் மறைத்து வைத்திருந்த ஒரு பார்சலை கைப்பற்றி எடுத்து சோதனை இட்டபோது, ரூ.24.72 லட்சம் மதிப்புடைய 540 கிராம் தங்கப் பசையை கைப்பற்றினர். கடத்தல் ஆசாமி யார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே சென்னை விமான நிலையத்தில் உள்ள ஃபாரின் போஸ்ட் ஆபீஸ்க்கு சீனாவில் இருந்து, தமிழ்நாட்டில் உள்ள தென்காசி முகவரிக்கு 2 பாா்சல்களும், இங்கிலாந்தில் இருந்து சென்னை முகவரி ஒரு பாா்சலும் வந்திருந்தன. அந்த பார்சல்களில் பரிசு பொருட்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. சுங்கத்துறை அலுவலர்களுக்கு அந்த பார்சல்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. அந்த பார்சலை திறந்து பார்த்து சோதனையிட்டனா்.
அந்த பார்சல்களில் சிறு, சிறு தங்க துண்டுகள் 31 துண்டுகள் இருந்தன. அதன் மொத்த எடை 420 கிராம். அவைகளின் சர்வதேச மதிப்பு ரூபாய் 22.49 லட்சம். இதை அடுத்து சுங்கத்துறை அலுவலர்கள் அந்த தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர். அதோடு இந்த முகவரிகளில் யாருக்கு, இந்த தங்க கட்டிகள் வந்தன என்று வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை விமான நிலையத்தில் அடுத்தடுத்து, 3 இலங்கை விமானங்களிலும், இங்கிலாந்து, சீனாவில் இருந்து வந்த ஃபாரின் போஸ்ட் ஆபீஸ் பார்சல்களிலும் மொத்தம் ரூ.1.14 கோடி மதிப்புடைய 2.52 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இலங்கையைச் சேர்ந்த இரண்டு பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளன. அவர்களிடம் சுங்கத்துறை அலுவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: குட்கா மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்த 36 பேர் கைது