சென்னை கொடுங்கையூர் திருவள்ளுவர் நகர் 7ஆவது மெயின் ரோட்டில் குடும்பத்துடன் வசித்து வருபவர் ஐசக் லிவிங்ஸ்டன் (51). இவர் தனியார் (சத்தியம்) தொலைக்காட்சி நிறுவனர்.
கடந்த மாதம் 28ஆம் தேதி முதலமைச்சரின் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக புறப்பட்டுக்கொண்டிருந்தார். அப்போது, வீட்டின் பீரோவை திறந்து பார்த்தபோது, அதில் இருந்த சுமார் 50 சவரன் தங்க நகைகள் மாயமானது தெரியவந்தது.
மேலும், வீட்டில் இருந்த 7 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணமும் காணாமல் போயிருந்தது. இதுதொடர்பாக கொடுங்கையூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர், அவர் வீட்டில் பணியாற்றி வரும் கனிமொழி என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: வேலை வாங்கித்தருவதாக கூறி பணம் மோசடி - இருவர் கைது