சென்னை: துபாயிலிருந்து சென்னை சா்வதேச விமானநிலையத்திற்கு நேற்று (செப். 21) எமிரேட்ஸ் ஏா்லைன்ஸ் சிறப்பு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்கத்துறையினா் சோதனையிட்டனா்.
அப்போது சென்னையை சோ்ந்த பயணி ஒருவர், தன்னிடம் சுங்கத்தீர்வை செலுத்தும் பொருட்கள் எதுவும் இல்லை என்று கூறி, கிரீன் சேனல் வழியாக வெளியேற முயன்றாா். இதனால், சுங்கத்துறையினருக்கு அந்த பயணி மீது சந்தேகம் ஏற்பட்டது.
583 கிராம் தங்க பசை
இதையடுத்து அவரை தடுத்து நிறுத்தி, அவருடைய உடமைகளை அலுவலர்கள் சோதனையிட்டனா். அதில் எதுவும் இல்லை என்ற நிலையில் பயணியை தனி அறைக்கு அழைத்து சென்று முழுமையாக சோதனையிட்டனா்.
அப்போது அவரின் உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த 4 பிளாஸ்டிக் பாா்சலை கைப்பற்றினா். அவற்றில் தங்க பசையை அவர் மறைத்து வைத்திருந்து தெரியவந்தது. மொத்தம் ரூ.27.8 லட்சம் மதிப்பிலான 583 கிராம் தங்க பசையை சுங்கத்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
தொடர்ந்து சுங்கத்துறையினா் கடத்தலில் ஈடுபட்டு வந்த சென்னை பயணியை கைது செய்து, அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: பொள்ளாச்சி பாலியல் வழக்கு: குற்றவாளிகளிடம் குற்றப்பத்திரிகை நகல்