இலங்கையிலிருந்து தங்கத்தை கைப்பையில் மறைத்து எடுத்துவந்த இலங்கையைச் சோ்ந்த முகமது சபீா் (வயது 33) என்பவா் சென்னை விமான நிலைய சுங்கச்சோதனையில் சிக்காமல் தப்பித்து வெளியேவந்து விட்டாா்.
பின்பு அவா் மீனம்பாக்கம் மெட்ரோ ரயிலில் நிலையம் சென்று பாரிமுனைக்குச் செல்வதற்காக ரயிலில் ஏறும் முன்பு மெட்ரோரயில் நிலையத்தில் முகமது சபீரின் கைப்பையை ஸ்கேன் செய்து பறிசோதித்தனா்.
அப்போது கைப்பையில் தங்கக்கட்டிகள் இருப்பதை கண்டுப்பிடித்தனா். இதையடுத்து முகமது சபீா் அங்கிருந்து தப்பியோட முயன்றாா். ஆனால் மெட்ரோ ரயில்நிலைய ஊழியா்கள் அவரை மடக்கிப்பிடித்து சென்னை விமான நிலைய காவல் துறையினரிடம் ஒப்படைத்தனா்.
காவல் துறையினர் பையை சோதணையிட்ட போது பைக்குள் சுமாா் 350 கிராம் தங்கக்கட்டிகள் இருந்தன. அதன் மொத்த மதிப்பு ரூ. 12.5 லட்சம் இருக்கும் என தெரிவிதனர். இதையடுத்து முகமது சபீரையும் தங்கக் கட்டிகளையும் காவல் துறையினர் விமானநிலைய சுங்கத்துறையிடம் ஒப்படைத்தனா். சுங்கத்துறை அதிகாரிகள் முகமது சபீரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிக்க: வாகன விற்பனை சரிவு - உற்பத்தியை நிறுத்தும் அசோக் லேலண்ட்!