சென்னை: துபாயிலிருந்து இன்று காலை சிறப்பு மீட்பு விமானம் ஒன்று சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தடைந்தது. விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறையினர் சோதனையிட்டனர். அப்போது ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த முகமது ஹசன் அலி(23) என்பவா் தன்னிடம் சுங்கத் தீா்வை செலுத்தும் பொருள்கள் எதுவும் இல்லை எனக்கூறி கிரீன் சேனல் வழியாக வெளியே செல்ல முயன்றாா். ஆனால் அவா் அணிந்திருந்த காலணி சற்று வித்தியாசமாக இருந்ததால், அவரை உள்ளே வரவழைத்து அவருடைய காலணியை வாங்கி ஆய்வு செய்தனா்.
அப்போது காலணிகளுக்கு நடுவில் தங்கக் கட்டிகளை மறைத்து வைத்திருந்ததைக் கண்டுப்பிடித்தனா். பின்னர் அவரிடமிருந்து மொத்தம் 239 கிராம் தங்கத்தை கைப்பற்றினா். அதன் மதிப்பு ரூ.12 லட்சம் எனக் கூறப்படுகிறது. இவரை சுங்கத்துறை அலுவலர்கள் கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதற்கிடையே இன்று காலை சென்னையில் இருந்து துபாய் செல்லவிருந்த சிறப்பு விமானத்தில் பயணம் செய்யவந்த பயணிகளை சுங்கத் துறையினர் சோதனை மேற்கொண்டனார். அப்போது ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த சாதிக்(21) என்பவரை சந்தேகத்தின் அடைப்படையில் சுங்கத்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது அவரது கைப்பையில் மறைத்து வைத்திருந்த சவுதி ரியால், அமெரிக்க டாலா் கரன்சிகளை கைப்பற்றினா். அதன் மதிப்பு ரூ.6.5 லட்சம். இதையடுத்து அவருடைய பயணத்தை ரத்து செய்ததுடன் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: சென்னை விமான நிலையத்தில் ரூ. 1.57 மதிப்பிலான தங்கம் பறிமுதல்