ஹாங்காங்கில் இருந்து சென்னை வந்த விமானப் பயணிகளின் உடைமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, 28 வயது மதிக்கத்தக்க கொரிய இளைஞர் சுங்கப் பகுதியில் ஸ்கேனிங் கருவி அருகே ஒரு பையை வைத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.
உடனே, சுங்க இலாகா அதிகாரிகள் பையைப் பிரித்து பார்த்தபோது, அதில் நான்கு கிலோ கிராம் தங்கக் கட்டிகள் இருந்தன. இதன் மதிப்பு ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் ஆகும். மேலும், தப்பி சென்ற இளைஞர் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க:
சென்னையில் பயங்கர ஆயுதங்களுடன் ரவுடிகள் அட்டகாசம் - பகீர் சிசிடிவி காட்சி!