மதுரை:கோகுல்ராஜ் கொலை வழக்கில் மதுரை மாவட்ட சிறப்பு நீதிமன்றம் 10 பேருக்கு ஆயுள் தண்டனை அளித்தது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.
அதில், " இந்த வழக்கின் நோக்கம், சிசிடிவி காட்சிகள், புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி, தலைமறைவாக இருந்தது ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு கீழமை நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. இந்த வழக்கில் சாட்சிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டவர்கள் பெரும்பாலும் அதிகாரிகளும், நிபுணர்களுமே.
இந்த வழக்கில் பல ஆண்டுகளாகச் சிறையில் உள்ள நிலையில் இவற்றைக்கருத்தில் கொண்டு, கீழமை நீதிமன்றம் வழங்கிய தண்டனையை ரத்து செய்தும், அதுவரை ஜாமீன் வழங்கியும் உத்தரவிட வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
இதையும் படிங்க:கோகுல்ராஜ் கொலை வழக்கு - யுவராஜ் உள்பட 11 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு