ETV Bharat / state

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு - இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை - Teen commits suicide by hanging

சென்னை: காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

loveissue_suicide
loveissue_suicide
author img

By

Published : Oct 5, 2020, 10:36 AM IST

சென்னை தியாகராய நகர் டாக்டர் தாமஸ் சாலையைச் சேர்ந்தவர் முருகன். இவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வருகின்றார். முருகனுக்குத் திருமணமாகி அர்ஜூன் என்ற மகனும், திவ்யா(20) என்ற மகளும் உள்ளனர். மகள் திவ்யா கே.கே. நகரில் உள்ள கார்ப்பரேசன் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து முடித்துவிட்டு வீட்டில் உள்ளார்.

இந்நிலையில் திவ்யா தனது தூரத்து உறவினர் நூபேஸ் என்பவருடன் காதல் வயப்பட்டு இருவரும் காதலித்து வந்ததாகத் தெரிகிறது. இவர்களது காதல் விவகாரம் திவ்யாவின் பெற்றோருக்கு தெரியவந்ததை அடுத்து திவ்யாவை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் மனமுடைந்த திவ்யா நேற்று(அக்.04) வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதனைக் கண்ட இவரது தந்தை மற்றும் உறவினர்கள் திவ்யாவை மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு திவ்யாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர், ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த தேனாம்பேட்டை காவல் துறையினர் திவ்யாவின் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:

சர்வதேச விமான நிலையத்தில் எட்டு கிலோ தங்கம் பறிமுதல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.