மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பிப்ரவரி 24ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு சட்டப்பேரவையில், நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நடைபெற்றபோது, 110 விதியின்கீழ் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார்.
அதில், "பெண் குழந்தைகளுக்காக மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆற்றிய சேவையை நினைவுகூரும் வகையில் அவரது பிறந்தநாளான பிப்ரவரி 24ஆம் தேதி மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக தமிழ்நாடு அரசால் கொண்டாடப்படும்" என்று அறிவித்தார்.
இந்நிலையில், ஜெயலலிதாவின் பிறந்தநாளான வரும் 24ஆம் தேதியை மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக கொண்டாடுவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
இதையும் பார்க்க: நோயாளிகள் பயன்படுத்த மெத்தை, தலையணை வழங்கிய செஞ்சிலுவைச் சங்கம்!