ETV Bharat / state

சாலையில் சரிந்து காணப்படும் ராட்சத தடுப்பு - அச்சத்தில் பொதுமக்கள் - சாலையில் சரிந்து காணப்படும் ராட்சத தடுப்பு

சென்னை: பூந்தமல்லி சாலை அருகே தனியார் கட்டுமானத்திற்காக அமைக்கப்பட்ட ராட்சத தடுப்பு நேற்று இரவு வீசிய பலத்த காற்றால் சாலையில் சரிந்து காணப்படுவதால், அப்பகுதியை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் விபத்து ஏற்படும் அச்சத்தில் உள்ளனர்.

ராட்சத தடுப்பு
ராட்சத தடுப்பு
author img

By

Published : May 26, 2021, 3:23 PM IST

போரூர் அருகே பூந்தமல்லி நெடுஞ்சாலையோரம் தனியார் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. சாலையை ஒட்டி சுமார் 50 அடியில் ராட்சத தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நேற்று (மே.25) இரவு பலத்த காற்று வீசியதால், அந்த ராட்சத தடுப்பானது சரிந்து மின்சார கம்பம் மீது சாய்ந்து, மின்சார ஒயர்கள் மீது விழுந்தது.

இதனைக்கண்ட அப்பகுதியினர் மின்சாரத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து, நள்ளிரவு 12.30 மணிக்கு மின்சார சேவை துண்டிக்கப்பட்டதோடு, சென்னை மாநகராட்சியிலும், கட்டட நிர்வாகத்தினருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. ஊரடங்கு காரணமாக கிரேன் ஏற்பாடு செய்ய முடியாது என்பதால், காலையில் இதனை அகற்றுவதாகத் தெரிவித்தனர்.

ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அப்பகுதியினைக் கடந்து செல்வதற்குச் சிரமப்படுகின்றனர். இதன் காரணமாக நேற்று நள்ளிரவு துண்டிக்கப்பட்ட மின்சாரசேவையானது, இதுவரை தர இயலாத சூழ்நிலை நிலவுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இதையும் படிங்க: நடமாடும் காய்கறிகள் விற்பனை: விபரங்களை அறிய இணையதளம் அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.