ETV Bharat / state

'5,8ஆம் வகுப்பு மாணவர்களின் திறனைக் கண்டறியவே பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது' - தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்

சென்னை: ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு மாணவர்களின் திறனைக் கண்டறிவதற்காகவே பொதுத்தேர்வு  நடத்தப்படவுள்ளது என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Minister of Tamil Nadu School Education
Minister of Tamil Nadu School Education
author img

By

Published : Jan 21, 2020, 1:10 PM IST

இந்திய பட்டயக் கணக்காளர் அமைப்பின் கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்றார். நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”பன்னிரெண்டாம் வகுப்பு வணிகவியல், பொருளியல் பிரிவு மாணவர்களுக்கு பட்டயக் கணக்காளர் பயிற்சி வழங்குவதற்காக, பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவுடன் பயிற்சி வகுப்புகள் தொடங்க பள்ளிக்கல்வித் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும் தென்னிந்திய கணக்காயர் அமைப்புடன் இணைந்து இந்தப் பயிற்சி வகுப்பினை பள்ளிக்கல்வித்துறை நடத்தும். ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு அந்தந்த கல்வி மாவட்ட அளவில் மாதிரி வினாத்தாள் தயாரித்து விரைவில் வெளியிடப்படும்.

மாணவர்களின் திறனை கண்டறிவதற்காகவே பொதுத்தேர்வு நடத்தப்படவுள்ளது

தனியார் பள்ளிகளில் அதிக கல்விக் கட்டணத்தை பெற்றுக்கொண்டு வார விடுமுறையில் பயிற்சி வகுப்புகள் நடத்துவதினால், அதில் பயிலும் மாணவர்கள் அதிகமான எண்ணிக்கையில் தேர்ச்சி அடைகின்றனர். அரசுப் பள்ளியில் மாணவர்களின் திறனைக் கண்டறியவே பொதுத்தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:'5,8ஆம் வகுப்பு மாணவர்கள் அதே பள்ளியில் பொதுத்தேர்வு எழுதலாம்'

Intro:ஐந்து எட்டாம் வகுப்பு மாணவர்களின்
திறனை கண்டறியவே பொதுத் தேர்வு

அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

Body:சென்னை,

ஐந்து எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு அவர்கள் பயிலும் பள்ளியிலேயே தேர்வு மையம் அமைக்கப்பட்டு நடத்தப்படும் எனவும், மாணவர்களின் திறனை கண்டறிவதற்காக நடத்தப்படுவதாகவும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

இந்திய பட்டயக் கணக்காளர் அமைப்பின் கருத்தரங்கில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பன்னிரண்டாம் வகுப்பு வணிகவியல் பொருளியல் பிரிவு மாணவர்களுக்கு பட்டய கணக்காளர் பயிற்சி வழங்குவதற்காக, பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய உடன் பயிற்சி வகுப்புகள் தொடங்க பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

தென்னிந்திய கணக்காயர் அமைப்புடன் இணைந்து இந்தப் பயிற்சி வகுப்பினை பள்ளிக்கல்வித்துறை நடத்தும்.

ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு அந்தந்த கல்வி மாவட்ட அளவில் மாதிரி வினாத்தாள் தயாரித்து விரைவில் வெளியிடப்படும். மாநிலங்களை பின்பற்றிய பொது தேர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளில் அதிக கல்விக் கட்டணத்தை பெற்றுக்கொண்டு வார விடுமுறையில் பயிற்சி வகுப்புகள் நடத்துவது அதில் பயிலும் மாணவர்கள் அதிகமான எண்ணிக்கையில் தேர்ச்சி அடைகின்றனர். அரசு பள்ளியில் மாணவர்களின் திறனை கண்டறியவே பொதுத்தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நீட் தேர்வு குறித்து பயிற்சி அளிப்பதில் உள்ள சிக்கல்கள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்தஅமைச்சர்,
நீட் தேர்வு குறித்து செய்தித்தாள்களில் வருபவரை பார்த்துக் கொண்டிருக்கிறேன் என தெரிவித்தார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.