ETV Bharat / state

ஓபிஎஸ் மனைவி மறைவு: செய்திக் குறிப்பு வெளியிட்ட மருத்துவமனை - Gem Hospital

முன்னாள் முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மறைந்த நிலையில், அவர் சிகிச்சைப் பெற்றுவந்த தனியார் மருத்துவமனை செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஓபிஎஸ் மனைவி மறைவு
ஓபிஎஸ் மனைவி மறைவு
author img

By

Published : Sep 1, 2021, 11:21 AM IST

சென்னை: ஓ. பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி உடல்நலக்குறைவு காரணமாக சென்னை பெருங்குடி தனியார் மருத்துவமனையில் கடந்த 10 நாள்களாக மருத்துவம் பெற்றுவந்தார். இந்த நிலையில் இன்று காலை மாரடைப்பு காரணமாக காலமானார்.

இந்த நிலையில், அவருக்கு மருத்துவம் அளித்த ஜெம் மருத்துவமனையின் முதன்மைச் செயல் அலுவலர் மருத்துவர் அசோகன் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார்.

அதில், "தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், அஇஅதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வத்தின் மனைவியார் விஜயலட்சுமி (66) உடல்நலக்குறைவால் சென்னை ஜெம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த பத்து நாள்களாகச் சிகிச்சைப் பெற்றுவந்தார்.

உடல் நலமடைந்து மருத்துவமனையிலிருந்து இன்று வீடு திரும்ப இருந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை 5 மணியளவில் தீவிர மாரடைப்புக்குள்ளானார்.

உடனடியாக இதயநோய் வல்லுநர்கள், தீவிரச் சிகிச்சை வல்லுநர்கள் தக்கச் சிகிச்சையளித்தும் பயனின்றி காலை 6.45 மணியளவில் இயற்கை எய்தினார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்" எனத் தெரிவித்திருந்தார்.

ஓபிஎஸ் மனைவி விஜயலட்சுமி மறைவுக்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மூத்த அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்கள், உதயநிதி உள்ளிட்ட தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

விஜயலட்சுமியின் உடல் தேனிக்கு கொண்டுசெல்லப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெம் மருத்துவமனையின் செய்திக்குறிப்பு
ஜெம் மருத்துவமனையின் செய்திக்குறிப்பு

இதையும் படிங்க: ஓபிஎஸ் மனைவி காலமானார்: ஸ்டாலின், எடப்பாடி நேரில் அஞ்சலி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.