சென்னை: தாம்பரம் மாநகராட்சி கூட்டரங்கில் ஓய்வுபெற்ற நீதியரசரும் திடக்கழிவு மேலாண்மை கண்காணிப்பு குழு தலைவருமான ஜோதிமணி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநகராட்சி மேயர், துணை மேயர், மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி ஆணையர் ஆகியோர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் தாம்பரம் மாநகராட்சியில் வெற்றி பெற்ற மாமன்ற உறுப்பினர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
இதுகுறித்து திடக்கழிவு மேலாண்மை கண்காணிப்பு குழு தலைவர் ஜோதிமணி கூறுகையில், "சென்னைக்கு அடுத்தபடியாக தாம்பரம் மாநகராட்சி உள்ளது. சென்னையில் குப்பைகளை அகற்றி அதை தாம்பரம் நகராட்சியில் போட வேண்டிய சூழ்நிலை வரும். மேலும், தாம்பரம் மாநகராட்சியில் மூன்று குப்பை கிடங்குகள் உள்ளன.
குப்பை கிடங்கு சம்பந்தமான பிரச்சனை
தாம்பரம் மாநகராட்சி உட்பட்ட பகுதிகளில் நீர் நிலைகளில் அதிகம் குப்பை கொட்டப்படுவதாக வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. பொதுமக்கள் குப்பைகளை வீடுகளிலேயே தரம்பிரித்து மாநகராட்சி ஊழியர்கள் இடம் கொடுத்தாள், அதிகப்படியான குப்பை சேருவதை தவிர்த்துவிடலாம்.
இன்னும் 6 மாத காலத்தில் தாம்பரம் மாநகராட்சியில் உள்ள குப்பை கிடங்குகள் சம்பந்தமான பிரச்சனை தீர்த்து வைக்கப்படும்" என்றார்.
பின்னர் பேசிய மாநகராட்சி துணை மேயர் காமராஜ், "குப்பை கொட்டப்படும் இடங்களை கண்டறிந்து சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணித்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். பல்லாவரம் ரேடியல் சாலை ஓரம் கொட்டப்பட்டு உள்ள குப்பை கிடங்கை விரைவில் அகற்றப்படும்" இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிங்க: வங்கிக் கணக்கில் மோசடி - செல்போன் ஆர்டர் செய்த கும்பல்