ETV Bharat / state

கோடை காலத்தில் தீ பிடிக்கும் குப்பை கிடங்குகள் : காரணமும்... தீர்வும்.. - பெருங்குடி குப்பை கிடங்கில் தீ

கோடை காலத்தில் பெருங்குடி,கொடுங்கையூர் உள்ளிட்ட குப்பை கிடங்குகள் தீ பிடிப்பது வாடிக்கையாகிவிட்டது. குப்பை கிடங்கு தீ விபத்தால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்பு மற்றும் அடிக்கடி தீ விபத்து ஏற்பட காரணம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

garbage-depots-on-fire-in-summer-what-is-the-cause-and-solution கோடை காலத்தில் தீ பிடிக்கும் குப்பை கிடங்குகள் : காரணமும்... தீர்வும்...

author img

By

Published : May 3, 2022, 8:15 AM IST

சென்னை: கோடை காலத்தில் பெருங்குடி மற்றும் கொடுங்கையூரில் அமைந்து இருக்கும் குப்பை கிடங்குகள் தீ பிடிப்பது வாடிக்கையாகிவிட்டது. வட சென்னை மற்றும் மத்திய சென்னை பகுதிகளில் ஒரு நாளைக்கு 2,800 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. இந்த குப்பைகள் கொடுங்கையூரில் சுமார் 269 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள குப்பை கிடங்கில் கொட்டப்படுகின்றன. அதேபோல் தென் சென்னையில் சேகரிக்கப்படும் 2,600 டன் குப்பைகள், பெருங்குடியில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள குப்பைக் கிடங்கில் கொட்டப்படுகின்றன.

குப்பைகள் குவியல் : அங்கு வீட்டு உபயோகப் பொருட்களில் இருந்து வரும் கழிவுகள், துணிகள், பிளாஸ்டிக் போன்ற கழிவுகள், மின்சாதன கழிவுகள், தொழிற்சாலைகளில் இருந்து வரும் கழிவுகள், கட்டிட இடிபாட்டுக் கழிவுகள், மது, புகையிலை, குளிர்பங்கள் & போதை பொருட்களின் கழிவுகள், மருத்துவ கழிவுகள், துப்புரவு கழிவுகள், பரிசோதனை மையங்களின் கழிவுகள் என வகைப் படுத்தப்பட்ட மற்றும் வகைப்படுத்த இயலாத குப்பைகள் வந்து குவிக்கப்படுகிறது. கொட்டப்படும் குப்பைகளில் 20% முதல் 25 % குப்பைகள் மட்டுமே மறுசுழற்சி அல்லது உரமாக மாற்றப்படுகிறது.

கோடை காலத்தில் தீ பிடிக்கும் குப்பை கிடங்குகள் : காரணமும்... தீர்வும்...

நிலம், நீர் மற்றும் காற்று: மீதமுள்ள குப்பைகள் பராமரிக்கப்படாததால் குப்பை மலை போல அங்கு காணப்படுகிறது. இதனால் நிலம், நீர் மற்றும் காற்று என அனைத்தும் பாதிக்கப்படுகிறது. மேலும் ஏப்ரல் முதல் ஜூன் மாதத்துக்குள் இந்த கிடங்குகளில் தீ விபத்து ஏற்பட்டு விடும், சில சமயங்களில் உடனடியாக அணைக்கப்படும். ஆனால் சில சமயங்களில் பெரிய அளவில் தீ விபத்து ஏற்படும். சமீபத்தில் பெருங்குடி குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து கிட்டத்தட்ட 3 நாட்களாக தீ அணைப்பதற்கு மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் தீயணைப்பு துறையினர் போராடினர்.

பெருங்குடி குப்பை கிடங்கில் தீ - அமைச்சர் கே.என்.நேரு நேரில் ஆய்வு

ஆண்டுதோறும் தீ விபத்து: இது போன்று ஆண்டு தோறும் குப்பை கிடங்குகளில் தீ விபத்து ஏற்பட என்ன காரணம் என்பது குறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த ஜியோ டாமின் தெரிவித்ததாவது, "குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட முக்கியமாக இரண்டு காரணங்கள் உள்ளது. ஒன்று இயற்கையாக நடைபெறும் மற்றொன்று செயற்கையாக நாம் ஏற்படுத்துவது. குப்பைகளைத் தரம் பிரிக்காமல் ஒரே இடத்தில் வைப்பதால் மீத்தேன் வாயு அதிக அளவில் உருவாகும், இந்த மீத்தேன் வாயு மீது அதிகப்படியான வெயில் படுவதால் வேதி வினையால் தீ விபத்து ஏற்படுகிறது.

தீ வைப்பது ஒன்றே தீர்வாகும்: ஆனால் தென்னை நார் கழிவால் தான் தீ விபத்து ஏற்படுகிறது என மாநகராட்சி மற்றும் அரசு தெரிவிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். மேலும் குப்பை கிடங்கு இருக்கும் பகுதிகளில் மட்டுமே குப்பைகளைச் சேகரித்து வைக்க முடியும். இதனால் அதிக அளவில் குப்பைகள் வரும்பொழுது குப்பை மேடாக மாறிவிடும் அதன்மீது ஜேசிபி முதலியவற்றை ஏறுவதற்கான வாய்ப்பில்லை, எனவே அந்தக் குப்பைகளை குறைப்பதற்குத் தீவைப்பது ஒரே தீர்வாகும். எனவே இயற்கை தீ விபத்தை விட செயற்கையாகவும் தீ வைக்கப்படுகிறது" என தெரிவித்தார்.

மோசமான விளைவுகள் : மேலும் குப்பை கிடங்கில் போதை பொருட்களின் கழிவுகள், மருத்துவ கழிவுகள், துப்புரவு கழிவுகள், பரிசோதனை மையங்களின் கழிவுகள் என அனைத்தும் கழிவுகளும் தீ விபத்து ஏற்படும் போது நச்சு புகையாக வெளியேறி கற்று மாசு மட்டுமின்றி கிடங்குகள் அருகில் வசிக்கும் மக்களுக்கும் மூச்சுத்திணறல், ஆஸ்துமா, நுரையீரல் தொற்று போன்ற பிரச்சினைகளும் ஏற்படுகிறது. இது மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்றார்.

நோய்களை உருவாக்க அதிக வாய்ப்பு: "இதுபோன்று தீ விபத்து ஏற்படும்பொழுது வெளியேறும் நச்சுப் புகையால் மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். குப்பை கிடங்குகளில் குப்பை மட்டுமே இருப்பதில்லை மருத்துவ கழிவு, பிளாஸ்டிக் கழிவு உள்ளிட்டவை அனைத்து வகையான கழிவுகளும் உள்ளது. இதை அனைத்தும் தீயில் எரியும் பொழுது டை ஆக்சின், நைட்ரஸ் ஆக்சைட், சல்பர்-டை-ஆக்சைடு முதலிய வாயுகள் வெளியேறி காற்றுடன் கலந்து சுவாசக் கோளாறு பிரச்சனை, ஆஸ்துமா நோய் உள்ளிட்ட நோய்களை உருவாக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.

  • பெருங்குடி குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தை இரவு பகலாக
    அயராமல் போராடி அணைக்கப் பாடுபட்ட அதிகாரிகள், தீயணைப்பு வீரர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளும் பாராட்டுகளும்!

    வருமுன் காப்பதே சிறப்பு!

    எனவே இனி இத்தகைய நிகழ்வு நேராமல் தடுப்பதற்குரிய வழிகளைக் காண அறிவுறுத்துகிறேன். https://t.co/WwH4P1Kitq

    — M.K.Stalin (@mkstalin) April 30, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

தீர்வு என்ன?: ஏற்கனவே நோய் உள்ளவர்களை அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். ஆரோக்கியமாக இருக்கும் மக்களையும் இது பாதிக்கும். இதற்கு தீர்வு என்னவென்று பார்த்தால் குப்பை கிடங்கிற்கு வருவது 50 சதவீதம் மக்கும் குப்பையும், 50% மக்கா குப்பையும் தான். இதில் மக்கும் குப்பையை உரமாக தயாரித்துபயன்படுத்திக்கொள்ளலாம்.

மக்கா குப்பையை 30% மறுசுழற்சி செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். மீதமுள்ள 20% மட்டுமே கிடங்கில் குப்பையாக இருக்கும். இதனால் பெரிய பாதிப்பு ஏற்படாது. முழுமையாக குப்பைகளை அகற்றி விட முடியாது. ஆனால் முடிந்த அளவுக்கு குப்பைகளை சேகரித்து வைக்காமல் குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே அரசு மற்றும் மாநகராட்சியிடம் பல்வேறு திட்டங்கள் உள்ளது. அதனை சரியாக செயல்படுத்த வேண்டும்" என தெரிவித்தார்.

வருமுன் காப்பதே சிறப்பு: பெருங்குடி குப்பை கிடங்கு தீ பிடிப்பது குறித்து ட்விட்டரில் முதலமைச்சர் ஸ்டாலின் "பெருங்குடி குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தை இரவு பகலாக அயராமல் போராடி அணைக்கப் பாடுபட்ட அதிகாரிகள், தீயணைப்பு வீரர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளும் பாராட்டுகளும். வருமுன் காப்பதே சிறப்பு, எனவே இனி இத்தகைய நிகழ்வு நேராமல் தடுப்பதற்குரிய வழிகளைக் காண அறிவுறுத்துகிறேன்" என பதிவு செய்து இருந்தார். எனவே வருமுன் காப்பதே சிறப்பு என்று பெயரளவில் இல்லாமல் செயலிலும் காட்ட வேண்டும்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் உள்ள 3 குப்பைக் கிடங்குகளில் மறுசுழற்சி முறையில் மின்சாரம் - அமைச்சர் கே.என்.நேரு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.