ETV Bharat / state

சென்னையில் போலீஸ் ஸ்டிக்கரை ஒட்டி காரில் ஊர்வலம்.. கொத்தாக சிக்கிய ரவுடிக் கும்பல்!

சென்னையில் இடத்தரகராறு காரணமாக பெண் வழக்கறிஞர், ரவுடிகளை வைத்து மிரட்ட கூறியதாக கூறப்படும் சம்பவத்தில், போலீஸ் என ஸ்டிக்கெர் ஓட்டிய காரில் ஊர் சுற்றிய 7 பேரை ரோந்து பணியில் ஈடுப்பட்ட போலிசார் கைது செய்தனர்.

Chennai
சென்னை
author img

By

Published : Aug 19, 2023, 2:24 PM IST

சென்னையில் இரவு ரோந்து பணியை தீவிரப்படுத்தி குற்ற சம்பவங்களை தடுக்கும்படி காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டு உள்ளார். அதன்படி சென்னை கொளத்தூர் பகுதியில் போலீசார் ஆகஸ்ட் 18ஆம் தேதி இரவு ரோந்து பணியை தீவிரப்படுத்தினர். வாகன தணிக்கையிலும் ஈடுபட்டனர்.

அப்போது கொளத்தூர் கங்கை அம்மன் கோயில் தெருவில் சந்தேகத்திற்கிடமான வகையில் போலீஸ் என ஸ்டிக்கர் ஒட்டிய கார் ஒன்று குடியிருப்பு பகுதியில் சுற்றியது. உடனே கொளத்தூர் போலீசார் அதனை மடக்கி நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காருக்குள் கத்தி போன்ற ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து காரில் இருந்த 7 பேரை பிடித்து காவல் நிலையம் கொண்டு சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியைச் சேர்ந்த வரதராஜன் என்ற கைப்புள்ள ராஜ் தலைமையில் இந்த 6 பேரும் சென்னை வந்து இருப்பது தெரிய வந்தது. வரதராஜன் மீது 5 கொலை வழக்குகள், 10 கொலை முயற்சி வழக்குகள் உள்பட 17 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.

இதையும் படிங்க: கணவன் - மனைவி தகராறு: தட்டிக்கேட்ட திமுக கவுன்சிலர் கணவர் உட்பட 6 பேர் மீது வழக்கு... நடந்தது என்ன?

இவருடன் வந்தவர்கள் கல்லூரி மாணவர்கள் கோகுல், கமல்தாஸ் மற்றும் கார் ஓட்டுனர் விஷ்வா மற்றும் பாண்டிச்சேரியைச் சேர்ந்த சீனிவாசன், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த திலகர் என்பது தெரிய வந்தது. இவர்கள் இடப் பிரச்சினையில் ஒருவரை மிரட்டி இடத்தை காலி செய்யும் நோக்கத்திற்காக சென்னை வந்தது விசாரனையில் தெரிய வந்ததாக போலீசார் கூறி உள்ளனர்.

மேலும், கொளத்தூரில் வசித்து வரும் பெண் வழக்கறிஞர் ஒருவருக்கு குமரன் நகரில் பூர்வீக சொத்து 2 கிரவுண்ட் இருப்பதாகவும், அவரது உறவினரான டில்லிபாபு, ராமசாமி ஆகியோருக்கு அதில் பங்கு உள்ளதாகவும் கூறப்படுகிறது. சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பாக டில்லிபாபுவுக்கு சொந்தமான இடத்தை பெண் வழக்கறிஞர் வாங்கியதாக தெரிகிறது.

இந்த நிலையில் டில்லிபாபு மரணமடைந்தார். இதனையடுத்து அந்த இடத்தை டில்லி பாபு உறவினர்கள் அனுபவித்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த இடத்தை காலி செய்ய கூறி டில்லிபாபு உறவினர்களிடம் பெண் வழக்கறிஞர் கேட்டு கொண்டதாகவும், ஆனால் யாரும் காலி செய்யவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் இரு தரப்பினரிடையே பிரச்சினை ஏற்பட்டதாகவும் இது தொடர்பாக பெண் வழக்கறிஞர் கொளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் சிவில் பிரச்சினை என்பதால் நீதிமன்றத்தை நாடும்படி போலீசார் அறிவுறுத்தியதாக தெரிகிறது.

இந்த நிலையில் பெண் வழக்கறிஞர், விக்கிரவாண்டி ரவுடி வரதராஜன் கும்பலை வைத்து அந்த இடத்தில் இருக்கும் டில்லிபாபு உறவினர்களை விரட்ட வரவழைத்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. ஆயுதங்களுடன் வந்த 7 பேரையும் கொளத்தூர் போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான பெண் வழக்கறிரை போலீசார் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: இடிந்து விழும் நிலையில் மின் கம்பங்கள்: நடவடிக்கை எடுக்குமா மின்வாரியம்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.