ETV Bharat / state

செல்ஃபோன் பறிப்பில் ஈடுபட்ட கும்பல் கைது - chennai crime news

வடசென்னையில் செல்ஃபோன் பறிப்பில் ஈடுபட்ட நான்கு பேரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

செல்போன் பறிப்பில் ஈடுபட்ட கும்பல் கைது
செல்போன் பறிப்பில் ஈடுபட்ட கும்பல் கைது
author img

By

Published : Oct 6, 2021, 8:16 PM IST

சென்னை வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த சாமுவேல் (21) மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநராக பணியாற்றுகிறார். இவர் நேற்று (அக். 5) வழக்கம்போல் பணி முடித்து புதுவண்ணாரப்பேட்டை வழியாக நடந்துசென்று கொண்டிருந்தபோது அவரை 4 பேர் வழிமறித்து செல்ஃபோனை பறித்து தப்பி சென்றனர்.

உடனே சம்பவம் தொடர்பாக சாமுவேல் புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அப்புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது சாமுவேலிடம் செல்ஃபோன் பறித்துச் சென்ற ராஜேஷ்(22) என்பவரைக் கைது செய்து செல்ஃபோனையும் பறிமுதல் செய்தனர்.

ரூ. 35 ஆயிரம் செல்ஃபோன் பறிப்பு

இதேபோல் வேளச்சேரி பகுதியை சேர்ந்த பாலாஜி (25) தன்னுடைய மினி வேனில், கொடுங்கையூர் ரயில்வே கேட்டில் காத்திருந்தார். அப்போது திடீரென வந்த மூன்று பேர் மினி வேன் கண்ணாடிகளை உடைத்து பாலாஜியை சரமாரியாகத் தாக்கினர்.

மேலும் பாலாஜி வைத்திருந்த ரூ. 35 ஆயிரம் மதிப்புள்ள செல்ஃபோன், ரூ. 5 ஆயிரம் பணத்தையும் பறித்து சென்றனர். இந்த விபத்தில் பாலாஜி ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் மயங்கி விழுந்தார். உடனடியாக அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் பாலாஜியை மீட்டு சிகிச்சைக்காக அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக கொடுங்கையூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியிலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் கிருஷ்ணா(22), ஜெயராம்(19), ஆகாஷ்(20) என்பது தெரியவந்தது.

நான்கு பேரும் நண்பர்கள்

உடனே அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டபோது 4 பேரும் நண்பர்கள் எனவும், இவர்கள் சாமுவேலிடம் செல்ஃபோன் திருடிவிட்டு, அனைவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் பாலாஜியிடம் கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டனர்.

மேலும் மீனவர்கள், வியாபாரிகள் என நள்ளிரவு, அதிகாலை நேரங்களில் வேலைக்குச் செல்வோர் அதிகமுள்ள வடசென்னை பகுதியில் நடந்த செல்ஃபோன், பண பறிப்பு சம்பவங்கள் அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.