ETV Bharat / state

"பரப்புரைகளில் எஸ்.பி வேலுமணிக்கு எதிரான வழக்கு குறித்து பேச கூடாது" - சென்னை உயர் நீதிமன்றம் - chennai court news

சென்னை: அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு எதிரான மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கை, தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் பயன்படுத்த கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிடுள்ளது.

MHC order
MHC order
author img

By

Published : Feb 17, 2021, 10:14 PM IST

சென்னை, கோவை மாநகராட்சி டெண்டர்களில் முறைகேடு செய்ததாக அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு எதிரான புகார் மீது நீதிமன்ற மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட கோரி திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி, அறப்போர் இயக்கம் சார்பில் ஜெயராம் வெங்கடேசன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கு இன்று (பிப்.17) தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் விஜய் நாராயண், 'சென்னை, கோவை மாநகராட்சியில் 220 டெண்டரில் முறைகேடு நடந்திருப்பதாக அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு எதிரான புகாரில் முகாந்திரம் உள்ளதா என ஆரம்பகட்ட விசாரணை முடிவடைந்திருப்பதாகவும், அதில் அமைச்சர் மீது வழக்கு பதிவு செய்ய எந்த முகாந்திரமும் இல்லை என முதலமைச்சர், அமைச்சரவை, தலைமை செயலாளருக்கு அறிக்கை அனுப்பியதாகவும், அதை அவர்கள் ஏற்றுகொண்டதாகவும், அதனால் இந்த வழக்கை முடித்து வைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இதற்கு மனுதாரர் தரப்பில், ஆரம்பகட்ட விசாரணை முடிவடைந்தாலும் அமைச்சருக்கு நற்சான்று அளிக்கப்படவில்லை. எனவே இந்த வழக்கை நேரடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கு எதிரப்பு தெரிவித்து அமைச்சர் எஸ்.பி வேலுமணி தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் முகுல் ரோத்தகி, மனுதாரரின் கோரிக்கையை ஏற்க கூடாது. முதற்கட்ட விசாரணையில் அமைச்சர் மீது வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் இல்லை என லஞ்ச ஒழிப்புதுறை அறிக்கை அளித்திருப்பதாகவும், அதனால் மனுதாரர்கள் லஞ்ச ஒழிப்புதுறையின் அறிக்கையை எதிர்த்து மாவட்ட நீதிமன்றத்தில் தான் வழக்கு தொடர முடியும் என்றும் தெரிவித்தார்.

இதனையடுத்து, தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடக்கவிருக்கும் சூழ்நிலையில் இந்த வழக்கை விசாரிப்பது முறையாக இருக்காது என்றும், அரசியல் கட்சிகள் இந்த வழக்கு குறித்து பேச வாய்ப்பிருப்பதால், வழக்கு விசாரணையை தேர்தலுக்கு பின் ஜூன் மாதத்திற்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், தேர்தல் பரப்புரையில் இந்த வழக்கு குறித்து பேச கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: சத்தி பேருந்து நிலையத்தில் பிச்சை எடுத்த நரிக்குறவர் குழந்தைகள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.