புனேவைச் சேர்ந்த அஜய் சோனி (வயது 54) என்பவர் செங்குன்றம் அடுத்த வடபெரும்பாக்கம், பார்வதிபுரம் மசூதி அருகே வெளிமாநிலத்தில் இருந்து இறக்குமதி செய்யயும் வீட்டு உபயோக மரச்சாமான் குடோன் நடத்தி வருகிறார்.
இவரது குடோன் உள்ளிருந்து புகை வருவதை பார்த்த பொதுமக்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயனைப்புத் துறையினர் தீயை அணைக்க முயற்சித்தனர்.
தீ கட்டுக்குள் வராததால் செங்குன்றம், மணலி, மாதவரம், செம்பியம், அம்பத்தூர் ஆகிய ஐந்து பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைப்பதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இவர்கள் நான்கு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில் சுமார் 50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்ததாக கூறப்படுகிறது.
சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த செங்குன்றம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
இதையும் படிக்க: உலக மாற்றுத் திறனாளிகள் தினம் - மெரினாவில் சிறப்பு பாதை