ETV Bharat / state

திமுக ஆட்சியில் காவலர்களுக்கு முழு சுதந்திரம்: அமைச்சர் சேகர்பாபு - சென்னை மாவட்ட செய்திகள்

திமுக ஆட்சியில் காவலர்களுக்கு முழு சுதந்திரம் வழங்கப்படுவதன் மூலம் சென்னையில் சட்டம் ஒழுங்கு முழுமையாக நிலை நாட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

ISO தரச்சான்றிதழ்” வழங்கும் நிகழ்ச்சி
ISO தரச்சான்றிதழ்” வழங்கும் நிகழ்ச்சி
author img

By

Published : Nov 17, 2022, 9:26 AM IST

சென்னை: மிகவும் பழைமை வாய்ந்த காவல் நிலையமாக கருதப்படும் பூக்கடை காவல் நிலையத்திற்கு “ISO தரச்சான்றிதழ்” வழங்கும் நிகழ்ச்சியானது பூக்கடை காவல் நிலைய வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

1876ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த காவல் நிலையம் ஏறக்குறைய 150 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. தற்போது சென்னை பூக்கடை காவல் நிலையத்தில் நவீன முறையில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. சூரிய சக்தி மூலம் ஒளிரும் மின்விளக்குகள் பொருத்தப்பட்டு 10 லட்சம் மதிப்பிலான 90 மரச்சாமான்கள் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளன.

ISO தரச்சான்றிதழ்” வழங்கும் நிகழ்ச்சி

புகார் அளிக்க வரும் பொதுமக்களின் குழந்தைகள் விளையாடுவதற்கு விளையாட்டு பொருட்களும் இங்கு வைக்கப்பட்டுள்ளன. 81 முக்கிய ஆவணங்கள் இங்கு முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறது. பூக்கடை காவல் நிலையம் முழுவதும் சிவப்பு வண்ணத்திற்கு பதிலாக வெள்ளை வண்ணம் பூசப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் சென்னை பூக்கடை காவல் நிலையத்திற்கு “ISO தரச்சான்றிதழ்” வழங்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் பேசிய சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், காவல் நிலையத்தின் சுகாதாரம், பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் நிர்வாகத்தின் அடிப்படையில் சென்னை பூக்கடை காவல் நிலையம் இந்திய அளவில் 10ஆவது இடத்தையும், தமிழ்நாட்டு அளவில் 5ஆவது இடத்தையும் பிடித்துள்ளது. சென்னை பூக்கடை காவல் நிலையம் மற்ற காவல் நிலையத்துக்கு ஒரு முன்மாதிரியாக அமைந்துள்ளது என்றார்.

அவரை தொடர்ந்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, பொதுமக்கள் சுற்றி பார்ப்பதற்க்கு சிறந்த காவல் நிலையமாகவும், ஆண்,பெண் என இரு பாலினத்தவரையும் சமமாக மதிக்கும் காவலர்களை கொண்ட காவல் நிலையமாகவும், சென்னை பூக்கடை காவல் நிலையம் அமைந்துள்ளது. துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்குட்ப்பட்ட அனைத்து காவல் நிலையங்களும் சர்வதேச தரச் சான்றிதழை பெறும் வகையில் காவலர்கள் அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திமுக ஆட்சியில் காவலர்களுக்கு முழு சுதந்திரம் வழங்கப்படுவதன் மூலம் சென்னையில் சட்டம் ஒழுங்கு முழுமையாக நிலை நாட்டப்பட்டுள்ளது. அரசியல் குறுக்கீடு இல்லாமல் சட்டத்தின் அடிப்படியில் முறையாக செயல்படும் காவல் நிலையம் பூக்கடை காவல் நிலையம். காவலர்கள் அனைவரும் வெள்ளை உள்ளம் கொண்டவர்கள் என்பதை எடுத்துக்காட்டும் வகையில் பூக்கடை காவல் நிலையத்திற்க்கு வெள்ளை வண்ணம் பூசப்பட்டுள்ளது என்றார்.

இந்த நிகழ்ச்சியில் வடக்கு மண்டலம் கூடுதல் ஆணையாளர் அன்பு, வடக்கு மண்டல இணை ஆணையாளர் ரம்யா பாரதி, தரச்சான்றிதழ் வழங்கும் நிறுவனத்தின் முதன்மை இயக்குநர் கார்த்திகேயன் உள்பட திரளான காவலர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: மருத்துவர்களுக்கு அழுத்தம் தரக்கூடாது என கோரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.