ETV Bharat / state

ETV Bharat 2022 Roundup: ஓராண்டில் தமிழக அரசு செய்தது என்ன? - MK Stalin

கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 133 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த திமுக, 2022ஆம் ஆண்டில் என்ன செய்தது என்பது குறித்த விரிவான செய்தியை காணலாம்.

பொங்கல் தொகுப்பில் தொடங்கி பொங்கல் தொகுப்பிலே முடிவடைந்த திமுக 2022.. விரிவான பார்வை!

author img

By

Published : Dec 31, 2022, 1:26 PM IST

Updated : Dec 31, 2022, 3:05 PM IST

சென்னை: திமுக ஆட்சி பொறுப்பேற்று, முதல் தைப்பொங்கல் திருநாளில் 21 தொகுப்பு கொண்ட பொங்கல் பரிசை அரசு வழங்கியது. ஒருபுறம் பொங்கல் தொகுப்பு வழங்கியதில் மக்களிடையே வரவேற்பு இருந்தாலும், மறுபுறம் தரமற்ற பொருட்களை பெற்றதாக விமர்சனங்களும் எழுந்தன. அதனால் முதலமைச்சர் ஸ்டாலின், பொங்கல் தொகுப்பு வழங்குவதற்கு டெண்டர் விடப்பட்ட நிறுவனத்தை கருப்பு பட்டியில் சேர்ப்பதற்கு அதிரடியாக உத்தரவிட்டார்.

விவசாயிகளிடம் கரும்பு ஒன்றிற்கு ரூ.13 கொள்முதல் செய்து, அதனை 33 ரூபாய்க்கு டெண்டர் கொடுத்ததிலும், மற்ற பொருட்களில் 150 கோடி வரை முறைகேடு நடந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார். இவ்வாறு பொங்கல் தொகுப்பில் பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்தாலும், அதன்பின் பிப்ரவரியில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 70 சதவீதத்துக்கு மேற்பட்ட இடங்களை திமுக கைப்பற்றியது.

அரேபிய பயணத்தில் குடும்ப சர்ச்சை: முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த மார்ச் மாதம் துபாய் எக்ஸ்போ-வில் பங்கேற்கவும், வெளிநாட்டு முதலீட்டாளர்களைச் சந்திக்கவும் 5 நாட்கள் அரசு முறை பயணமாக துபாய் சென்றார். ஐக்கிய அரபு நாடுகளின் முதலீட்டார்களைச் சந்தித்துப் பேசிய ஸ்டாலின், பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்.

இந்த பயணத்தின் மூலம் 6 முக்கிய நிறுவனங்களுடன் ரூ.6,100 கோடி மதிப்பீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை தமிழ்நாடு அரசு கையெழுத்திட்டுள்ளது. இதன் மூலம் 14,700 பேருக்கு வேலை கிடைக்க இருக்கிறது என்றும், பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமாக அமையும் எனவும் கூறப்பட்டது. ஆனால் முதலமைச்சரின் துபாய் பயணத்தில் எதிர்ககட்சிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்தன.

அதிலும் குறிப்பாக அரசு முறை பயணத்தில் முதலமைச்சரின் குடும்ப உறுப்பினர்கள் சென்றிருந்தது பெரிதும் பேசப்பட்டது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, "முதலமைச்சர் குடும்பம் துபாய்க்கு 5,000 கோடி ரூபாய் கொண்டு சென்றுள்ளது. அந்த பணத்தை வைத்து முதலமைச்சரின் உறவினர்கள் பெயரில் லூலு மால் அமைக்க திட்டமிடப்பட்டதாக குற்றச்சாட்டு வைத்திருந்தார்.

நீக்கப்படாத நீட் ரத்து: மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்பது திமுகவின் முக்கியமான தேர்தல் வாக்குறுதியாக இருந்தது. அதற்கான தீர்மானத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஆளுநருக்கு தமிழ்நாடு அரசு அனுப்பியது. ஆனால், அதற்கான நடவடிக்கை என்பது மந்தமாக உள்ளது. ஏனென்றால் உச்ச நீதிமன்றமே நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் வழக்கில் தேர்வுக்கு ஆதரவாக தீர்ப்பளித்திருந்தது.

இந்த நிலையில், "நீட் நுழைவுத்தேர்வில் தமிழ்நாட்டுக்கு விலக்கு கிடைக்கும்" என முதலமைச்சர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்திருந்தார். இருப்பினும், தற்போது வரை நீட் தேர்வு விலக்கு அளிக்கப்படவில்லை.

சிங்காரச் சென்னை 2.0: பருவமழை காலங்களில் நீர் தேங்கும் இடங்களில் மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொள்ள "சிங்காரச் சென்னை 2.0 திட்டம்" உலக வங்கி நிதி மற்றும் கொசஸ்தலையாறு வடிநிலப்பகுதிகளில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைக்கும் திட்டம் ஆகியவற்றின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்து திட்டப் பணிகளை உடனடியாக தொடங்க முதலமைச்சர் உத்தரவிட்டார். இந்தத் திட்டத்தின் மூலம் மாண்டஸ் புயலை தமிழ்நாடு அரசு சிறப்பாக கையாண்டது.

ஆன்லைன் பதிவு கட்டாயம்: இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில் சொத்து ஆவணங்களை இணையத்தில் பதிவேற்றியது முக்கியமான ஒன்று. இதுதவிர, 2,000 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆக்கிரமிப்பில் இருந்த கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதனுடன் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தில் 58 அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டனர். அன்னைத் தமிழில் அர்ச்சனை திட்டம் தொடங்கப்பட்டது என இந்தத் துறையில் பல முக்கியத்துவங்கள் இருக்கின்றன. குறிப்பாக, துறை சார்ந்த செயல்பாடுகள் பொதுமக்களின் பார்வைக்கு வெளியிடும் உத்தரவால் பெரிதும் பாராட்டப்படுகிறது.

இலங்கைக்கு உதவிக்கரம்: பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.15 கோடி மதிப்பிலான 500 டன் பால் பவுடர், ரூ.80 கோடி மதிப்பிலான 40,000 டன் அரிசி, ரூ.28 கோடி மதிப்பிலான 137 டன் மருந்து பொருட்கள் கப்பல் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டது.

வருவாய் பற்றாக்குறை திட்டம்: வருவாய் பற்றாக்குறையைக் குறைக்கவும் திட்டங்களை வகுத்துள்ளது தமிழ்நாடு அரசு. 2022 - 2023ஆம் ஆண்டில் வருவாய் பற்றாக்குறை ரூ.23,313 கோடியாக் குறைக்கவும், 2024 - 2025ஆம் ஆண்டில் ரூ.13,582 கோடியாகக் குறைக்கவும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

வருவாய் பற்றாக்குறையை குறைப்பதன் மூலம் தமிழ்நாட்டின் நிதிநிலைமையும், கடன் தாங்கு தன்மையும் வலுப்பெறும். பெரும்பாலும் வளர்ச்சிக்கான செலவினங்கள், நீண்டகாலத் திட்டங்ளுக்கு நிதியை அதிகமாக ஒதுக்கீடு செய்வதால் அதற்குரிய பலன்களும் நீண்ட காலத்தில் கிடைக்கத் தொடங்கும்.

விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பு: கடந்த 20 வருடங்களாக விவசாய மின் இணைப்புக்காக பதிவு செய்யப்பட்ட ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார். இந்த திட்டம் விவசாயிகள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.

இதனால் கடந்த சட்டப்பேரவையில் மேலும் 50,000 விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்திருந்தார். அதன்படி தற்போது, 34,000 விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 16,000 விவசாயிகளுக்கு தைப்பொங்கலுக்குள் மின் இணைப்பு வழங்கப்படும் எனவும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

தாலிக்கு தங்கம் திட்டத்துக்கு பதில்? 6ஆம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு ரூ.1000 வழங்குவதற்கான "புதுமை பெண்கள் திட்டம்" தொடங்கப்பட்டது. இந்த திட்டம் அனைவரது மத்தியிலும் வரவேற்பை பெற்றிருந்தாலும், ஏற்கனவே இருந்த தாலிக்கு தங்கம் திட்டத்தை ரத்து செய்துவிட்டு இந்த திட்டத்தை அமுல்படுத்தியதால் எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்தனர்.

ஹக் வித் பேரறிவாளன்: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த பேரறிவாளன், உச்ச நீதிமன்ற தீர்ப்புப்படி விடுதலை செய்யப்பட்டார். முதலமைச்சரின் ஸ்டாலின் பேரறிவாளனை, விடுதலையானதற்கு வாழ்த்துக்கள் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், கட்டியணைத்த நிகழ்வு பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியது. இதன் மூலம் சமீபத்தில் விடுதலையான ஆறு பேரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்கவில்லை என கூறப்பட்டது. இந்த விவகாரத்தில் திமுகவுடன் காங்கிரசுக்கு முரண்பாடு ஏற்பட்டிருந்தது.

நாட்டில் உள்ள கோவா, மும்பை போன்ற சில பெருநகரங்களில் மட்டுமே சொகுசு சுற்றுலா கப்பல் பயணம் இருந்து வந்தது. இந்த நிலையில் தமிழ்நாட்டின் முக்கியமான கடற்கரையான துறைமுகத்தில் சுற்றுலா கப்பல் பயணத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இதேபோன்று மலர் கண்காட்சி என்றாலே ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பகுதிகளில் இருந்த நிலையில், சென்னையில் மலர் கண்காட்சியை முதலமைச்சர் பார்வையிட்டு தொடங்கி வைத்தார்.

முதலீட்டாளர்களின் முதல் முகவரி: முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நடைபெற்ற “முதலீட்டாளர்களின் முதல் முகவரி – தமிழ்நாடு” மாநாட்டில் 1,25,244 கோடி ரூபாய் முதலீட்டில் 74,898 நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கும் வகையில் 60 திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, 1,497 கோடி ரூபாய் முதலீட்டில் 7,050 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் 12 திட்டங்களுக்கான வணிக உற்பத்தியை தொடங்கி வைத்தார். மேலும் 22,252 கோடி ரூபாய் முதலீட்டில் 17,654 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் 21 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

ஸ்ரீமதி - வாக்குறுதி: கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் சந்தேக மரணம் தொடர்பான விவகாரத்தில், தமிழ்நாடு அரசின் அலட்சியப் போக்கே வன்முறைக்கு காரணம் என கூறப்பட்டது. உளவுத்துறையின் தோல்வியே இதற்கு காரணம் என கூறப்பட்ட நிலையில், "விரைவில் இது குறித்து உண்மை கண்டறியப்படும்" என முதலமைச்சர் ஸ்டாலின் மாணவி ஸ்ரீமதியின் பெற்றோரிடம் வாக்குறுதி அளித்தார்.

செஸ் ஒலிம்பியாட்: தமிழ்நாட்டில் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை மாமல்லபுரத்தில் நடைபெற்றது. மாமல்லபுரத்தில் நடைபெற்ற இப்போட்டியில் 196 நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். சென்னை நேரு விளையாட்டு அரங்கில் தொடக்கம் மற்றும் நிறைவு விழா நடைபெற்றது.

இதில் ஆரம்ப விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டதால் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மெய்நிகர் காட்சிகள் மூலம் தமிழ்நாட்டின் பண்பாடு, கலாச்சாரம், வாழ்வியல் போன்றவை காட்சிப்படுத்தப்பட்டன. இதற்காக வருகை தந்த பிரதமர் மோடிக்கு சரியான பாதுகாப்பு அளிக்கப்படவில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டினார்.

திமுக எதிர்கட்சியாக இருந்தபோது அரசு நிகழ்ச்சிக்காக தமிழ்நாட்டுக்கு வந்த பிரதமர் மோடிக்கு எதிராக கருப்பு பலூன் பறக்க விட்டனர் என்றும், தற்போது வெள்ளைக் கொடி காட்டி வரவேற்கின்றனர் என்றும் விமர்சனங்களும் எழுந்தன.

போதைப்பொருள் ஒழிப்பு: இந்த திட்டத்தை தொடங்கி வைத்து மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமென முதலமைச்சர் கூறியிருந்தார். "திமுக ஆட்சி அமைந்தது முதல் 41,625 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இதுவரை 50 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஆனாலும் போதைப்பொருட்கள் நடமாட்டம் முழுமையாக முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை. அதை எப்படியாவது பெற்று விடுகிறார்கள். அவர்கள் கைக்கு எப்படியோ போய் சேர்ந்து விடுகிறது. அதை தடுக்கும் விதமாக செயல்பட வேண்டும்" என முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.

கரும்பில் கசந்த அரசு: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையம் மற்றும் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம், அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையத்தின் அறிக்கையும் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் துறை ரீதியாக, சசிகலா, அப்போதைய சுகாதாரத் துறை அமைச்சர் மற்றும் செயலாளர் ஆகியோர் மீது விசாரணை நடத்த முதலமைச்சர் உத்தரவிட்டார்.

துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களுக்கு கூடுதலாக நிதி வழங்க ஆணையம் பரிந்துரை செய்தது. ஆன்லைனில் ரம்மி, உள்ளிட்ட 21 சட்டப்பேரவை தீர்மானம் நிறைவேற்றிய தமிழ்நாடு அரசு, அதனை ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளது. அது இன்று வரை கிடப்பில் உள்ளது.

தற்போது 2023ஆம் ஆண்டு பொங்கல் தினத்தன்று, குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 உடன் சர்க்கரை, பச்சரிசி மற்றும் கரும்பு ஆகியவை வழங்கப்பட உள்ளது. முன்னதாக கரும்பை பொங்கல் தொகுப்பில் சேர்க்காததால், கரும்பு விவசாயிகள் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ETVBharat RoundUp 2022: நீதிபதிகள் நியமனம் முதல் டெலி-சட்டம் வரை முழுத் தகவல்!

Last Updated : Dec 31, 2022, 3:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.