ETV Bharat / state

ஆடியோ விவகாரத்தில் சுமூக முடிவு; சூர்யா சிவா இடைநீக்கம்: பின்னணி என்ன?

ஆடியோ விவகாரத்தில் உடனே சுமூக முடிவு எட்டப்பட்டதிற்கும், சூர்யா சிவா இடைநீக்கத்திற்கும் உள்ள பின்னணி குறித்து பார்க்கலாம்.

ஆடியோ விவகாரத்தில் சுமூக முடிவு
ஆடியோ விவகாரத்தில் சுமூக முடிவு
author img

By

Published : Nov 25, 2022, 1:45 PM IST

சென்னை: பாஜகவின் ஓ.பி.சி பிரிவு மாநில தலைவர் சூர்யா சிவா மற்றும் சிறுபான்மையினர் பிரிவு மாநில தலைவர் டெய்சி சரண் ஆகிய இருவரும் பேசிய ஆடியோவானது சமீபத்தில் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தை டெய்சி சரண், பாஜக மாநில தலைமைக்கு எடுத்து சென்றார். இதற்கு ஒழுங்கு நடவடிக்கை குழு அமைத்து விசாரணை நடத்தப்படும் எனக் கூறிய அண்ணாமலை, சூர்யா சிவாவை ஆறு மாதத்திற்கு இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். சூர்யா சிவா தனது தவறை ஒப்புக் கொண்டதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அண்ணாமலை தெரிவித்தார்.

நேற்று (நவ. 24) திருப்பூரில் கனகசபாபதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சூர்யா சிவா மற்றும் டெய்சி சரண் கலந்து கொண்டு தங்கள் தரப்பின் செயல்பாடுகள் குறித்து எழுத்துப்பூர்வமாக கடிதம் வழங்கினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சூர்யா சிவா மற்றும் டெய்சி சரண், 'சூர்யா சிவா எனக்கு தம்பி போன்றவர்', 'டெய்சி சரண் எனக்கு அக்கா போன்றவர்' என இருவரும் மாறி மாறி சமாதானம் செய்து கொண்டனர். மேலும் கட்சி தலைமை என்ன நடவடிக்கை எடுத்தாலும் கட்டுப்படுவோம் எனவும் தெரிவித்தனர்.

"தனிப்பட்ட முறையில் ஆடியோ விவகாரம் சுமூக பேச்சுவார்த்தையில் முடிந்தாலும் அதை நியாயம் என்று எடுத்துக் கொள்ள முடியாது. சூர்யா சிவா என்னுடைய நன்மதிப்பை பெரும் வரையில் பாஜகவின் தொண்டனாக பயணிக்கலாம்" என அண்ணாமலை தெரிவித்தார். இப்போது தான் பாஜகவின் ஆடியோ விவகாரம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் உடனே சுமூக பேச்சுவார்த்தையில் முடிந்தது எப்படி என கேள்வி எழுந்தது. இது குறித்து பாஜகவினரிடம் விசாரிக்கும் போது பல தகவல்களை தெரிவித்தனர்.

அதில், "திமுகவில் உரிய அங்கீகாரம் கிடைக்காமல் பாஜகவில் இணைந்த திருச்சி சிவா மகன் சூர்யா சிவாவிற்கு மாநில பொறுப்பு வழங்கப்பட்டது. இது பாஜகவின் மூத்த தலைவர்களுக்கு பிடிக்கவில்லை. குறிப்பாக தென் மாவட்டங்களில் பாஜகவின் ஒரு முகமாக சூர்யாவை மாற்றுவதற்கான முயற்சி நடந்தது.

சூர்யா சிவாவின் இந்த முயற்சியை ஏற்கனவே தென் மாவட்டங்களில் பாஜகவின் முக்கிய நிர்வாகியாக இருக்கக்கூடிய கருப்பு முருகானந்தம் விரும்பவில்லை. கருப்பு முருகானந்தத்தின் தீவிர ஆதரவாளராக டெய்சி சரண் செயல்பட்டு வந்துள்ளார். இதனை அறிந்த சூர்யா, டெய்சி சரணுடன் மோதல் போக்கை தொடங்கியிருக்கிறார். அதனுடைய விளைவாகத்தான் ஆடியோ வெளியாகி இருக்கிறது" என பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், உடனே சுமூக பேச்சுவார்த்தை நடந்தது எப்படி என்று விசாரித்தோம். அதற்கு, "அண்ணாமலையின் கவனத்திற்கு இந்த ஆடியோ விவகாரம் 10 நாட்களுக்கு முன்பே வந்துள்ளது. டெய்சி சரணிடம் நடவடிக்கை எடுப்பதாக அண்ணாமலை வாக்குறுதி அளித்தார். வாக்குறுதியில் நம்பிக்கை இல்லாத டெய்சி சரண் ஆடியோவை வெளியிட்டுள்ளார் என சொல்லப்படுகிறது. இதில் அண்ணாமலை தரப்பு டெய்சி சரணிடம் பதவியை ராஜினாமா செய்ய நிர்பந்தம் செய்துள்ளது. அதற்கு டெய்சி சரண் சுமூகமாக போகிறோம் என முடிவு எடுத்துள்ளார்" என பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

தவறு செய்த சூர்யா மீது நடவடிக்கை எடுக்காமல் டெய்சி சரணை ஏன் அண்ணாமலை பதவியை ராஜினாமா செய்ய நிர்பந்தம் செய்தார் என விசாரித்தோம். அதற்கு, "சூர்யாவிடம் பாஜக நிர்வாகிகள் இது போன்று பேசிய ஆடியோ அதிகளவில் இருப்பதால், அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் டெய்சி சரணை ராஜினாமா செய்ய அண்ணாமலை நிர்பந்தம் செய்துள்ளார்" என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆகவே தான் சூர்யா சிவா மீது கடுமையான நடவடிக்கை எடுக்காததற்கும், ஆடியோ விவகாரம் சுமூகமாக முடிந்ததற்கும் முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: கோகுல்ராஜ் கொலை வழக்கு: நீதிமன்றத்தில் கண்கலங்கிய சுவாதி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.