ETV Bharat / state

1992, ஜூன் 20 வாச்சாத்தி மலைக்கிராமத்தில் நடந்தது என்ன? - வழக்கின் முழு விபரம்! - சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் கேஎம் விஜயன்

Full details of Vachathi incident: வாச்சாத்தி கிராம விவகாரம் தொடர்பாக சிறப்பு நீதிமன்றம் வழங்கிய உத்தரவை ரத்து செய்யக்கோாி அதிகாரிகள் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், வாச்சாத்தி கிராம மக்களுக்கு நடைபெற்றது என்ன என்பது குறித்தும் இந்த வழக்கு குறித்தும் விரிவாக பார்க்கலாம்...

Full details of Vachathi incident
வாச்சாத்தி கிராம வழக்கு நடந்தது என்ன?
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 29, 2023, 9:08 PM IST

Updated : Sep 30, 2023, 9:16 AM IST

சென்னை: வாச்சாத்தி கிராம விவகாரம் தொடர்பாக சிறப்பு நீதிமன்றம் வழங்கிய உத்தரவை ரத்து செய்யக்கோரி அதிகாரிகள் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்களின் தண்டனையையும் நீதிமன்றம் உறுதி செய்தது. பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான 18 பேருக்கும் 10 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கவும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் பின்னனி குறித்து விரிவாக பார்க்கலாம்..

வாச்சாத்தியும் - வன்முறையும்? சொந்த மக்களுக்கு எதிராகவே ஆயுதங்களை ஏந்தும் அதிகாரத்தை காவல் துறைக்கு யார் அளித்தது என்ற கேள்வியை 30 ஆண்டுகளுக்கு முன் தருமபுரி மாவட்டத்தின் வாச்சாத்தி மலைக் கிராம சம்பவம் நம்மிடையே எழுப்புகிறது. உண்மையில் அம்மக்கள் சந்தன மரங்களை பதுக்கினார்களா என்ற விசாரணையில் இருந்து இந்த வழக்கு தொடங்கிகுறது.

வாச்சாத்தி வன்முறையின் உச்சம்: தருமபுரி மாவட்டம், வாச்சாத்தி மலைக்கிராமத்தில் சந்தன மரங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி, கடந்த 1992ஆம் ஆண்டு ஜூன் 20ஆம் தேதி வனத்துறையினர், காவல் துறையினர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அத்துமீறி குடியிருப்புகளில் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது, அந்த கிராமத்தில் இருந்த இளம்பெண்கள் 18 பேரை அதிகாரிகள் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், ஆண்களை கடுமையாக தாக்கி வீடுகளை சேதப்படுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. 1992ஆம் ஆண்டு நடந்த வன்முறை குறித்து பலகட்ட போராட்டங்களுக்குப் பின் 1995இல் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

இது குறித்து விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள், 4 ஐ.எப்.எஸ் அதிகாரிகள் உள்பட 124 வனத்துறையினர், 86 காவல் துறையினர், 5 வருவாய்த் துறையினர் என 269 பேர் மீது கடுமையாக தாக்குதல் மற்றும் பாலியல் வன்புணர்வு உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

1996ஆம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் தொடங்கிய விசாரணை, 10 ஆண்டுகளுக்குப் பிறகு 2006ஆம் ஆண்டு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு 1 ஆண்டு முதல் 10 ஆண்டுகள் வரை தண்டனை விதித்தது. சிறை தண்டனையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் 2011-இல் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி வேல்முருகன், தீர்ப்பு வழங்குவதற்கு முன் பாதிக்கப்பட்ட மலைக்கிராம மக்களையும், அப்பகுதியையும் நேரில் ஆய்வு செய்யப்படும் என தெரிவித்தார். அதன்படி, 2023 மார்ச் 4ஆம் தேதி, சம்பவம் நடந்த வாச்சாத்தி மலைக்கிராமத்தில் நேரடியாக ஆய்வு செய்தார். வாச்சாத்தி மலைக்கிராமத்தில் இருந்து கலசப்பாடி, அரசநந்தம் உள்ளிட்ட மலைக்கிராம மக்களை நேரில் சந்தித்து அவர்களிடம் சம்பவம் குறித்து நேரடியாக கேட்டறிந்தார்.

தீர்ப்பு: மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட இந்த மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு 13 ஆண்டுகளுக்கு பின்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டதும், ஏராளமானோர் நேரடியாகவும், காணொளி வாயிலாகவும் நீதிமன்றத்தில் குழுமினர். தீர்ப்பை வாசித்த நீதிபதி, குற்றவாளிகளின் தண்டனையை உறுதி செய்தார். பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான 18 பேருக்கும் ரூபாய் 10 லட்சம் இழப்பீடாக வழங்கவும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், சம்பவம் நடந்த 1992ஆம் ஆண்டு மாவட்ட ஆட்சியராகவும், காவல் கண்காணிப்பாளராகவும் இருந்த அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டது. 30 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிமன்றத்தின் தீர்ப்பு சிறு மருந்தாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

உண்மையில் வாச்சாத்தியில் நடந்தது என்ன? அதிகாரிகள் மீது தான் தவறு உள்ளதா? சென்னை உயர் நீதிமன்றம் வழக்கறிஞர் காந்திகுமாரின் விளக்கம்: பொய் வழக்குகள், சந்தன மரங்கள் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் ஐ.ஆர்.எஸ் அதிகாரி செல்வராஜ் தலைமையில் 45 வனத்துறையினர் மக்களின் வீடுகளில் சோதனை செய்தனர். சோதனையில் ஈடுபட்ட வனத்துறையினர் மீது கிராம மக்கள் காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தினர்.

தாக்குதலில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், வனச்சரகர் சிங்காரவேலர் அளித்த புகாரின் பேரில் மாலை 4.15 மணிக்கு 300 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தொடர் விசாரணையில் சுமார் 62.5 டன் சந்தனமரம் கைப்பற்றப்பட்டது.

அந்த சோதனையில் 175 வீடுகளில் இருந்த 700க்கும் அதிகமானோரில், 181 பேரை முதற்கட்டமாக காவல் துறை கைது செய்தது. அதில் 90க்கும் மேற்பட்ட பெண்களை தனிமைப்படுத்தி விசாரணை செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த பெண்களில் சிலர், அதிகாரிகள் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்தனர். பாலியல் வன்கொடுமை நடந்திருந்தால் கட்டாயம் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால், வாச்சாத்தி வழக்கைப் பொறுத்தவரை எப்போது? எங்கே வன்கொடுமை நடந்தது என பாதிக்கப்பட்டவர்கள் தெளிவாகக் கூறவில்லை.

வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம், சாட்சிகளிடம் விசாரணை நடத்தாமல் பாலியல் வன்கொடுமை அடிப்படையில் தீர்ப்பை வழங்கியுள்ளது. உயர் நீதிமன்றமும் சாட்சிகள் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை நடத்தவில்லை. கீழமை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சரியா என மட்டும் தீர்ப்பு வழங்கியதை ஏற்க முடியாது. பாதிக்கப்பட்ட அதிகாரிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன்: குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 357-இன்படி தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக குற்ற வழக்குகளில் 6 சதவிகிதம் மட்டுமே காவல் துறைக்கு தண்டனை வழங்கப்படுகிறது. மீதம் 94 சதவிகிதம் விடுதலை செய்யப்படுகின்றனர்.

ஊடகங்களின் நீண்ட கால விவாதமே தீர்ப்பை பெரிதுபடுத்துகின்றது. தவறு செய்யும் அதிகாரிகளுக்கான தண்டனை அனைத்து வழக்குகளிலும் கிடைக்க வேண்டும். காவல் துறை விசாரணை எப்படி நடைபெற்றது என்பதை எந்த உறுதி செய்ய முடியவில்லை. அதனால், விசாரணையை நவீனப்படுத்தினால், தவறுகள் செய்தவர்கள் யாராக இருந்தாலும் உரிய தண்டனை கிடைக்கும். அவ்வாறு செய்தால் குற்றங்கள் தமிழகத்தில் குறையும் என விளக்கம் அளித்தார்.

இதையும் படிங்க: வாச்சாத்தி மேல்முறையீட்டு வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.. தருமபுரியில் பட்டாசு வெடித்து கொண்டாடிய கிராம மக்கள்!

Last Updated : Sep 30, 2023, 9:16 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.