சென்னை: தமிழ்நாட்டில் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
தேர்தல் வாக்குறுதியில் இடம்பெற்றிருக்கும் அறிவிப்பினைச் செயலாக்கும் வகையில், தொடர்ந்து மாநிலம் முழுவதுமுள்ள அரசுப் போக்குவரத்துக் கழகக் கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் பணிபுரியும் மகளிர், உயர்கல்வி பயிலும் மாணவியர் உள்ளிட்ட அனைத்து மகளிரும் கட்டணமில்லாமலும், பேருந்துப் பயண அட்டை இல்லாமலும் இன்று (மே 8) முதல் பயணம் செய்ய முதலமைச்சர் ஆணை பிறப்பித்துள்ளார்.
இதனையடுத்து தமிழ்நாடு முழுவதும் பேருந்துகளில், ‘மகளிர் பயணம் செய்யக் கட்டணமில்லை’ என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்த, மகளிர்களுக்கான இலவச பயணத் திட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதில் மகளிர் கட்டணமில்லாமல், பேருந்து பயண அட்டை இல்லாமல் பயணம் செய்யலாம் என மு.க.ஸ்டாலின் பிறபித்துள ஆணை தமிழ்நாட்டில் பெண்கள் மேம்பாட்டிற்கு வழிவகை செய்யும் .
மேலும் இதனால் போக்குவரத்துக் கழகத்திற்கு ஏற்படும் 1200 கோடியை, தமிழ்நாடு அரசு மானியமாக வழங்க ஈடுகட்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.