ETV Bharat / state

மதுரவாயலில் மணமக்களுக்கு பெட்ரோலை பரிசளித்த நண்பர்கள்! - Rising petrol and diesel prices

சென்னை: மதுரவாயலில் நடந்த திருமணத்தில் மணமக்களுக்கு அவர்களது நண்பர்கள் திருமண பரிசாக சின்ன வெங்காயம், பெட்ரோல், சமையல் எரிவாயு உருளை வழங்கி சிரிப்பலையை ஏற்படுத்தினர்.

chennai wedding function
chennai wedding function
author img

By

Published : Feb 18, 2021, 9:55 AM IST

சமீப காலங்களில் வரலாறு காணாத அளவுக்கு பெட்ரோல் விலை ஏற்றம் கண்டுவருகிறது. சமையல் எரிவாயு சமீபத்தில் ரூ.50 உயர்ந்து 900 ரூபாய் வரை விற்பனையாகிறது. இதனால், ஏழை, எளிய நடுத்தர வர்க்க மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

அதிலும் ஒரு லிட்டர் பெட்ரோல் 92 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இன்னும் சில நாள்களில் 100 ரூபாய் தொட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

சாதாரண மக்கள் வேதனை

இதேபோன்று சின்ன வெங்காயம், சமையல் எரிவாயு விலையும் முன்னெப்போதும் இல்லாத நிலையில் விலை உயர்ந்து காணப்படுகிறது. கரோனா காலத்திலும் விலை குறையாமல், நாளுக்கு நாள் உயரும் கடும் விலை ஏற்றம் சாதாரண மக்கள் வாழ்வாதாரத்தை இழந்துதவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சென்னை மதுரவாயலில் நடந்த திருமணத்தில் அவரது நண்பர்கள் அளித்த பரிசு பெரும் வியப்பை ஏற்படுத்தியதோடு, நிகழ்கால உண்மை நிலவரத்தையும் எடுத்தியம்புகிறது.

பெட்ரோல் பரிசு

சென்னை மதுரவாயலைச் சேர்ந்த கார்த்திக் - சரண்யா ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி வானகரம் பாக்கியலட்சுமி தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. பொதுவாக திருமணத்திற்கு வரும் நண்பர்கள் கையில் மொய்ப் பணமும், நினைவுப் பரிசும் வழங்கி வாழ்த்து தெரிவிப்பார்கள்.

இவர்கள் கொஞ்சம் வித்தியாசமாக மணமக்களுக்கு 5 லிட்டர் பெட்ரோல், சின்ன வெங்காய மாலை, சமையல் எரிவாயு விலை ஏற்றத்தை எடுத்துக் கூறும்விதமாக எரிவாயு உருளை ஆகிய மூன்றையும் பரிசாக அளித்து வாழ்த்துத் தெரிவித்தனர்.

மதுரவாயலில் மணமக்களுக்கு பெட்ரோலை பரிசளித்த நண்பர்கள்

சிந்திக்க...

மணமக்களும் அதனை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டனர். இந்த நிகழ்வு திருமணத்தில் பங்கேற்றவர்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியது (ஆனால் இது சிந்திக்க வேண்டியது).

இதையும் படிங்க: அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலாவை அறிவிக்கக்கோரிய வழக்கு: மார்ச் 15ஆம் தேதி விசாரணை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.