ETV Bharat / state

சென்னை ஐஐடியின் ஹைப்பர் லூப் மூலம் 2025ஆம் ஆண்டு சரக்கு போக்குவரத்து தொடங்கப்படும் - பேராசிரியர் சக்ரவர்த்தி

author img

By

Published : May 21, 2022, 12:15 PM IST

சென்னை ஐஐடி மூலம் கண்டுபிடிக்கப்பட்ட ஹைப்பர் லூப் மூலம் 2025ஆம் ஆண்டு சரக்கு போக்குவரத்து தொடங்கப்படும் என ஐஐடியின் ஏரோ நாட்டிக்கல் இன்ஜினியரிங் துறை பேராசிரியர் சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார்.

ஐஐடி மாணவர்
ஐஐடி மாணவர்கள்

சென்னை ஐஐடியில் தயாரிக்கப்பட்டுள்ள ஹைப்பர் லூப் அதிவேக ரயில் போக்குவரத்தின் மூலம் முதலில் 2025ஆம் ஆண்டு சரக்கு போக்குவரத்து தொடங்ககப்படும் எனவும், அதனைத் தொடர்ந்து 2030ஆண்டில் பயணிகள் போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படும் என சென்னை ஐஐடியின் ஏரோ நாட்டிக்கல் இன்ஜினியரிங் துறை பேராசிரியர் சக்ரவர்த்தி தெரிவித்தார்.

மேலும், தற்போது 5 மீட்டர் அளவிற்கு ப்ரோட்டோ டைப் வேக்கம் டியூப் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், தையூரில் உள்ள வளாகத்தில் 500 மீட்டர் அளவிற்கு ப்ரோட்டோ டைப் வேக்கம் டியூப் முதலில் உற்பத்திச் செய்யப்பட்டு, பரிசோதனை சோதனை செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

ஐஐடி மாணவர்

சென்னை ஐஐடியில் படிக்கும் மாணவர்கள் இணைந்து வாகனங்கள் செல்ல ட்யூப் போன்ற அமைப்பை உருவாக்கி, அதன் மூலம் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு மிக விரைவாக பயணிப்பதற்கான ஹைப்பர் லூப் தொழில்நுட்பத்தை வடிவமைத்துள்ளனர். இந்த திட்டத்திற்கான போட்டியில் பங்கேற்று அதிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்நிலையில் ஹைப்பர் லூப் தொழில்நுட்பத்தினை 5 மீட்டர் நீளத்தில் 2 மீட்டர் அளவில் உருவாக்கப்பட்டுள்ள ப்ரோட்டோ டைப் வேக்கம் டியூப் மூலம் சோதனை செய்யவுள்ளனர். எல் அண்டு டி L&T நிறுவனம் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதாக தெரிவித்துள்ளது.

மேலும், மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் ரயில்வே துறையின் சார்பில் 8.50 கோடி ரூபாய் நிதியுதவியை வழங்கினார். மேலும் தொடர்ந்து இதற்கு தேவையான உதவிகளையும் வழங்குவதாக தெரிவித்தார்.

இது குறித்து அவிஷ்கார் குழுவின் ஆலோசகரும், ஐஐடி ஏரோபேஸ் துறையின் பேராசிரியருமான எஸ்.ஆர்.சக்ரவர்த்தி கூறும்போது, “இந்தத் திட்டத்தில் வெற்றிபெற நாங்கள் மிகப்பெரிய முயற்சி மேற்கொண்டுள்ளோம். இது நாட்டின் அடுத்தகட்ட விரைவு பயணத்திற்கு உதவும் முக்கிய தொழில்நுட்பமாக இருக்கப் போகிறது. ஹைப்பர் லூப் என்னும் காற்றில்லா குழாய் வாகனப் போக்குவரத்தானது, அதிவிரைவு போக்குவரத்தின் 5 ஆவது நிலையாக இருக்கும்.

ஏரோபேஸ் துறையின் பேராசிரியர்

ஹைப்பர் லூப் குழாய்க்குள் காற்று இருக்காது. அதனால் வாகனங்களின் வேகத்தைக் குறைக்கும் உராய்வுக்கும் வாய்ப்பிருக்காது. எனவே தான் அதில், ஆயிரத்து 200 கிலோ மீட்டர் வேகம் வரை செல்ல முடியும் என ஸ்பேஸ் எக்ஸ்சின் (SPACE X) தலைமை பொறுப்பிலுள்ள எலான் மஸ்க் (Elon Musk) தெரிவித்துள்ளார்.

சென்னை ஐஐடியில் ஹைப்பர் லூப் திட்டத்தினை ஆய்வக நிலையில் செய்து வருகிறோம். சென்னை ஐஐடியின் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் மையத்தின் உற்பத்தி செய்வதற்கான பணிகளை தொடங்கியுள்ளோம். மேலும் தங்களின் கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமையும் பெறுகிறோம். ஹைப்பர் லூப் மூலம் மனிதர்கள், சரக்கு ஆகியவற்றை வேகமாக அனுப்ப முடியும்.

தற்போது 500 மீட்டர் நீளம் 2 மீட்டர் அகலத்திற்கு ப்ரோட்டோ டைப் குழாயை தையூரிலுள்ள வளாகத்தில் உற்பத்தி செய்யவுள்ளோம். ஹைப்பர் லூப் திட்டத்தில் ஒவ்வொரு பெட்டியையும் பாட் என கூறுவோம். வேக்கம் குழாயில் காற்று உள்ளே இருக்காது என்பதால் வேகமாக செல்ல முடியும். புல்லட் ரயில் மணிக்கு 300 கிலோ மீட்டர் வேகத்தில் தான் செல்லும். சென்னையில் இருந்து பெங்களுர், சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானத்தைவிட வேகமாக செல்ல வேண்டும் என்றால் மணிக்கு 600 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல வேண்டும்.

ப்ரோட்டோ டைப் வேக்கம் டியூப்

2025ஆம் ஆண்டில் சரக்கு போக்குவரத்தில் ஒரு மணி நேரத்திற்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் இயக்குவதற்கு திட்டமிட்டுள்ளோம். குறிப்பாக இந்த போக்குவரத்தை பயன்படுத்தும் போது எங்கு செயல்படுத்தினால் செலவு குறைவாக இருக்குமோ முதலில் அங்கு செயல்படுத்துவது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். குறிப்பாக சென்னை துறைமுகத்தில் சரக்குகள் தேக்கம் அடைந்தால் அதனை எடுத்துச் செல்வது, பெங்களுரில் விமானநிலையம் நகரத்திற்கு வெளியில் உள்ளது. விமானத்தில் பயணம் செய்ய உள்ளவர்கள் கொண்டு செல்ல உள்ள பொருட்களை நகரத்திற்குள் பரிசோதனை செய்த பின்னர், அதனை ஹைப்பர் லூப் பயன்படுத்தி கார்கோ மூலம் கொண்டு செல்லலாம்.

மத்திய ரயில்வேத்துறையால் அளிக்கப்பட்டுள்ள 8.5 கோடி நிதியுதவி 500 கிலோ மீட்டர் ப்ரோட்டோ டைப் டியூப் செய்வதற்கு மிகவும் உதவியாக இருக்கும். மேலும் உலகளவில் அங்கீகாரமும் கிடைக்கும். இந்த திட்டத்திற்கு தேவையான உதவிகளையும் செய்ய விரும்புபவர்களிடம் இருந்தும் உதவிகளை கோருவோம். மத்திய ரயில்வேதுறையுடனும் பேசி வருகிறோம். அவர்கள் ஐஐடியில் மாணவர்கள் உருவாக்கும் வடிவமைப்பையும், உலகளவில் உள்ள வடிவமைப்பையும் ஒப்பீட்டு பார்த்து வருகின்றனர்.

ஹைப்பர் லூப் மூலம் 2 ஆயிரத்து 30 மனிதர்கள் பயணிக்கும்போது, பேருந்து போன்று ஒவ்வொரு பெட்டியும் (பாட்) வடிவமைக்கப்படும். இதில் 40 முதல் 75 பயணிகள் செல்லலாம். இருக்கைகள் விமானத்தில் உள்ளது போன்று அமைக்கப்படும். ஒரு மணி நேரத்திற்கு 600 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படும். ரயில்வே ஸ்டேசன்களில் 5 நிமிடத்திற்கு ஒரு பாட் செல்வது போல் இல்லாமல், 2 .30 நிமிடத்திற்கு ஒரு பாட் செல்ல வேண்டும். ரயில் பெட்டிகளில் உள்ளது பாேல் பாட் இணைக்கப்படும். விண்வெளி மையங்களில் பயன்படுத்தப்படும் தொழில் நுட்படத்தை பயன்படுத்தி, ஸ்டேசன்களில் மனிதர்கள் செல்லும் போது காற்று புகாதவாறு அமைக்கப்படும்” என தெரிவித்தார்.

அவிஷ்கார் குழுவின் மாணவர் ராஜாராமன் கூறும்போது, “ கடந்த 3 ஆண்டாக ஹைப்பர் லூப் கண்டுபிடிப்பை வடிவமைக்கும் பணியில் ஈடுப்பட்டு வருகிறோம். ரயில்வேத்துறை அமைச்சர் நேரில் சந்தித்தது மிகவும் ஊக்கமளிப்பதாக இருக்கிறது” என கூறினார்.

இதையும் படிங்க: வந்தே பாரத் ரயில்களின் உற்பத்தியை ஆய்வு செய்த மத்திய அமைச்சர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.