ETV Bharat / state

திமுக அமைச்சர்களுக்கெல்லாம் சைக்காலஜிக்கல் ட்ரீட்மென்ட் வழங்கணும் - ஜெயக்குமார் - Jayakumar is definitely the double leaf for them

திமுக அமைச்சர்கள் அனைவருக்கும் நிச்சயம் மனநல சிகிச்சை அளிக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.

திமுக அமைச்சர்களை கடுமையாக விமர்சித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

author img

By

Published : Jan 27, 2023, 8:39 PM IST

சென்னை: பிப்ரவரி 3ஆம் தேதி பேரறிஞர் அண்ணா நினைவு நாளையொட்டி அதிமுக சார்பில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழ்நாடு முழுவதும் பேரணி நடத்த உள்ளதாகவும், அதன் ஒரு பகுதியாக சென்னையில் நடத்துவதற்காக காவல் ஆணையர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அனுமதி கேட்டு கடிதம் வழங்கியுள்ளதாக செய்தியாளரிடம் கூறினார்.

பின்னர், ஈரோடு மாவட்ட இடைத்தேர்தலை பொறுத்தவரை வேட்புமனுவை தாக்கல் செய்ய வருகிற 31ஆம் தேதி வரை நாட்கள் இருப்பதாகவும், மற்றவர்கள் வேட்பாளரை அறிவித்தால், அதைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை எனவும், நிச்சயமாக தேர்தலில் வெற்றி பெறப்போவது நாங்கள் தான் எனவும் அவர் தெரிவித்தார்.

அதிமுகவைப் பொறுத்தவரை விருப்ப மனுக்களைப் பெற்று, அந்த தொகுதியில் மக்கள் செல்வாக்கு யார் வைத்துள்ளார்கள் என்கிற அடிப்படையில் சீட் கொடுக்கப்படுகிறதாகவும், ஆனால் திமுக அப்படி இல்லை ஒரு சர்வாதிகார ஆட்சியாக தான் இருந்து வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.

தேர்தலில் தங்களது கூட்டணிக்கட்சிகள் நிச்சயம் எங்களுக்கு ஆதரவு தருவார்கள் எனவும், பாஜகவை பொறுத்தவரை தேசிய கட்சி தலைமையில் அவர்கள் அனுமதி பெற்ற பிறகு தான் தெரிவிப்பார்கள் எனவும் அவர் கூறினார். அதிமுக கட்சி எடப்பாடி பழனிசாமி தலைமையில் இருப்பதாகவும், ஆகவே நிச்சயம் இரட்டை இலை தங்களுக்குத் தான் வரும் என அவர் கூறினார்.

இந்த தேர்தல் போட்டியைப் பொறுத்தவரை ஜனநாயகத்திற்கும், பணநாயகத்திற்கும் நடக்கின்ற போட்டி; பணநாயகம் வென்றதாக சரித்திரம் இல்லை; நிச்சயம் ஜனநாயகம் வெல்லும் என நம்புகிறேன் என அவர் தெரிவித்தார். திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாததால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், விவசாயிகள், மீனவர்கள் என அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் எனவும்; இதுவரை யாருக்கும் அவர்கள் நிவாரணம் வழங்கியது இல்லை என்றும்; இவையெல்லாம் தேர்தல் நேரத்தில் பிரதிபலிக்கும் என ஜெயக்குமார் கூறினார்.

எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் அதிமுக உள்ளதாகவும், ஓபிஎஸ்ஸை பொறுத்தவரை நான்கைந்து பேர் கொண்ட ஒரு குழு என அவர் விமர்சனம் செய்தார். திருவள்ளூரில் அமைச்சர் நாசர் தொண்டர்களை கல்லை எடுத்து அடித்தது என திமுக அமைச்சர்கள் தொடர்ச்சியாக தொண்டர்களை தாக்கி வருவதாகவும், வாக்களித்த தொண்டர்களுடைய வயித்தெரிச்சலை கொட்டினால் நிச்சயம் அந்த கட்சி உருப்படாது எனவும் ஜெயக்குமார் குற்றம்சாட்டினார்.

தெளிவான மனநிலை இல்லாதவர்கள் அமைச்சராக இருப்பது மிகவும் வெட்கக்கேடாக உள்ளதாகவும், இவர்களுக்கு நிச்சயம் மனநல சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும், அமைச்சர்கள் எல்லாம் பைத்தியக்காரர்களாகவும், கோமாளியாகவும் செயல்படுவது மிகவும் வெட்கக்கேடாக உள்ளதாகவும் ஜெயக்குமார் குற்றஞ்சாட்டினார்.

இதனிடையே ’வேங்கை வயல் சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை இன்னும் கைது செய்யவில்லை, இவர்கள் எல்லாம் மனித உயிர்களை சாதாரணமாக தான் கருதுவார்கள். இதில் இந்த வழக்கு சவாலான வழக்கு என டிஐஜி பேட்டி கொடுக்கிறார்’ என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், 35 அமாவாசைகள் கடந்த சென்றும் இந்த திமுக ஆட்சியில் இதுவரை எந்த நல்ல விஷயமும் நடைபெறவில்லை என்ற ஈபிஎஸ் கூறியது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர் இந்த ஆட்சியே அமாவாசை ஆட்சி தான், இங்கு நிறைய அமாவாசைகள் இருக்கின்றனர். இன்னும் எத்தனை அமாவாசை வந்தாலும் இந்த அமாவாசைகள் ஒன்றும் செய்யப்போவதில்லை என பதில் அளித்தார்.

இதையும் படிங்க:தமிழ்நாடு முழுவதும் மோடியின் பிபிசி ஆவணப்படத்தை திரையிடுவோம் - சிபிஐ(எம்) அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.