ETV Bharat / state

ஜெ. நினைவிடத்திற்கு சசிகலா செல்வது பற்றி ஜெயக்குமார் கருத்து - சென்னை மாவட்ட செய்திகள்

ஜெயலலிதா மட்டுமே அம்மா மற்றவரெல்லாம் சும்மா. அம்மா என்ற சொல்லை சசிகலா பயன்படுத்தக் கூடாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
author img

By

Published : Oct 16, 2021, 6:49 AM IST

சென்னை: ராயபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், வட சென்னை தெற்கு கிழக்கு மாவட்டம் சார்பில் அதிமுக பொன்விழா கொண்டாடுவது குறித்து, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டம் தொடங்குவதற்கு முன்பு செய்தியாளரிடம் பேசிய ஜெயக்குமார், "எல்லைதாண்டி மீன்பிடித்ததாகக் கூறி நாகப்பட்டினம் மீனவர்கள் 23 பேரை, இலங்கைக் கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

கடலில் எல்லை என்பதே கிடையாது. காற்றின் வேகத்தில்தான் செல்வார்கள். இதுபோன்ற கைது நடவடிக்கைகளையும், சித்திரவதைகளையும் முற்றிலும் நிறுத்த வேண்டும். இது தொடர்கதையாக உள்ளது, எனவே உடனடியாக ஒன்றிய, மாநில அரசுகள் தலையிட்டு இதற்குத் தீர்வு காண வேண்டும்.

ஜெயலலிதா நினைவிடத்திற்கு சசிகலா செல்வது வீண் முயற்சி, அதனால் கட்சியில் எவ்வித பிளவையும் அவரால் ஏற்படுத்த முடியாது. ஜெயலலிதா மட்டுமே அம்மா மற்றவரெல்லாம் சும்மா. அம்மா என்ற சொல்லை சசிகலா பயன்படுத்தக் கூடாது.

தமிழ்நாட்டில் இரண்டு தீய சக்திகள் உள்ளன. ஒன்று திமுக மற்றொன்று சசிகலா. அதிமுக தொண்டர்கள் ஒன்றாக உள்ளனர், எந்தத் தீய சக்தியாலும் அதிமுக தொண்டர்களைப் பிரிக்க முடியாது.

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவிற்குப் பின்னடைவு இல்லை. உள்ளாட்சித் தேர்தல் நேர்மையாக ஜனநாயக முறையில் நடைபெற்றிருந்தால் வெற்றி தோல்வி சமமாக இருந்திருக்கும். மாநில தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்துவதற்குப் பதிலாக கட்சித் தொண்டர்களை வைத்து திமுக தேர்தல் நடத்தியிருக்கலாம்" என்றார்.

இதையும் படிங்க: கரோனா தடுப்பூசி செலுத்துவதில் 70% விரைவில் பெறுவோம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.