இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடற்கரை இடங்களில் வி.வி.மினரல், அதனை சார்ந்த நிறுவனங்கள் உலகிலேயே மிக அதிகமாக தாதுமனலை அதிமுக ஆட்சியில் கொள்ளையடித்துள்ளது.
அரசுக்கு சொந்தமான கனிமங்களை முறையான மைனிங் லீஸ் இல்லாமல் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் முந்தைய அரசு அலுவலர்கள், முன்னாள் முதலமைச்சர், வி.கே.சசிகலா ஆகியோர் சுமார் ரூ.2 லட்சம் கோடி மதிப்புள்ள தாதுமணல்களை கொள்ளையடித்துள்ளனர். எனது நண்பர் தயா தேவதாஸ் தாது மணல் கொள்ளை குறித்து உயர் நீதிமன்றத்தில் வெளிப்படுத்தினார்.
ஆனால் வி.வி.மினரல் குழுமத்தின் நிறுவனர் வைகுண்டராஜன் பொய்யான அறிக்கையினை தயார் செய்து உயர் நீதிமன்றத்தில் அளித்தார். இதன் காரணமாக அந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. ஆகவே தாது மணல் கொள்ளை குறித்து திமுக அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சட்டவிரோதமான குவாரிகள் - தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு