சென்னை: எங்கும் எதற்கெடுத்தாலும் சமூக வலைத்தளம் என்று இன்றைய இளைஞர்களின் மோகமாக இருந்து வருகிறது இன்ஸ்டாகிராம் செயலி. அப்படி இன்ஸ்டாகிராம் மூலம் பிரபலமானவர் அமலா ஷாஜி(Amala shaji). அவ்வப்போது அவரது சமூக வலைத்தளப் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு வந்தார். இந்நிலையில், திரைப்பட நடிகர், நடிகைகள் இணையாக கிட்டத்தட்ட 41 லட்சம் ஃபாலோயர்ஸ்களை கொண்டுள்ளார் அமலா ஷாஜி.
இப்படி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள அமலா ஷாஜி, தொடர்ந்து திரைப்படங்களின் பாடல்கள் மற்றும் வசனங்களுக்கு வீடியோ செய்து சமூக வலைத்தளவாசிகள் மத்தியில் இன்ஸ்டா பிரபலமாக வலம் வருகிறார். இன்ஸ்டா இன்ஃப்ளூயன்சர்ஸ்களுக்கான விருதுகளுக்கும் தேர்வாகி விருதும் பெற்றுள்ளார். தற்போது இன்ஸ்டா பிரபலமாக வலம்வந்த அமலா சிலப் படங்களிலும் நடிக்க கமிட்டாகியுள்ளதாகவும் தகவல் வெளிவந்தது.
இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த ஐடி ஊழியர் ஒருவர் அமலா ஷாஜி ட்ரேடிங் மூலம் தன்னை பணமோசடி செய்ததாக புகார் அளித்தது சமூக வலைத்தளத்தில் பெரும் சர்ச்சையாகியுள்ளது. முன்னதாக அமலா ஷாஜி ஆன்லைன் ட்ரேடிங் நிறுவனம் ஒன்றுக்கான விளம்பரத்திற்காக அவரது சமூகவலைத்தளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 1000 ரூபாய் கொடுத்தால் 10 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கும் என்று அந்நிறுவனம் போலி நிறுவனம் என்று தெரியாமல் அந்த நிறுவனத்தின் விளம்பரத்திற்காக வீடியோ பதிவிட்டு அவரது சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதனையடுத்து அமலா ஷாஜியின் வார்த்தைகளை நம்பி சென்னையைச் சேர்ந்த ஐடி ஊழியர் ஒருவர் அவரது பணத்தை இழந்துள்ளார். தான் ஏமாற்றப்பட்டிருப்பதை உணர்ந்த ஐடி ஊழியர் அமலா ஷாஜி பணமோசடியில் ஈடுபட்டுள்ளதாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்திருந்தார்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
முன்னாள் டிஜிபி-யும், ஐபிஎஸ் அதிகாரியுமான ரவி பொதுமக்களுக்கும் இன்ஸ்டாகிராம் மோகத்தால் கட்டுபாடுகளை மீறிவரும் இன்ஃப்ளூயன்சர்ஸ்களுக்கும் அறிவுரை வழங்கி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், "லட்சக்கணக்கில் ஃபாலோயர்ஸ்களை கொண்ட அமலா ஷாஜி ட்ரேடிங் நிறுவனத்தின் விளம்பரத்திற்காக அந்த நிறுவனத்தை ப்ரோமோட் செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவை நம்பி அவரது ஃபாலோயோர்ஸ்களில் பலரும் பணத்தை இழந்துள்ளனர்.
இதனையடுத்து அமலா ஷாஜி பணமோசடியில் ஈடுபட்டதாகக்கூறி அவர் மீது சென்னையைச் சேர்ந்த ஐடி ஊழியர் புகார் அளித்துள்ளார். தன்னைப் பொறுத்தவரையில் இதில் அமலா ஷாஜி குற்றவாளி இல்லை. இந்தச் சம்பவத்தில் அவரும் பாதிக்கப்பட்டவர் தான். ஆன்லைன் ட்ரேடிங் நிறுவனம் எனக்கூறி இன்ஸ்டா இன்ஃப்ளூயன்சர்ஸ்களை குறிவைத்து பொதுமக்களிடம் பணமோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். இப்படி அந்நிறுவனம் போலி என்று தெரியாமல்தான் அமலா ஷாஜியும் சிக்கியுள்ளார்.
பொதுமக்களை ஏமாற்றி பணம் பெற்றவர் மற்றும் கொடுத்தவர்களே இதில் முக்கிய குற்றவாளிகள். கிரிப்டோ கரன்சி, ட்ரேடிங் போன்ற போலியான நிறுவனங்களின் போலியான விளம்பரங்களைக் கண்டு பொதுமக்கள் மற்றும் சமூக வலைத்தளவாசிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஏமாற வேண்டாம். இன்ஸ்டா இன்ஃப்ளூயன்சர்ஸ்களும், சமூக வலைத்தளவாசிகளும் இது போன்ற போலி நிறுவனங்களின் பின்புலம் தெரியாமல் அந்நிறுவனங்களுக்கு ஆதரவாக வீடியோ எதையும் பதிவு செய்யாதீர்கள்" இவ்வாறு அந்த வீடியோவில் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: பேருந்துகள் சகஜமாக இயங்குவதாக கூறுவது உண்மையில்லை - சிஐடியு சவுந்தரராஜன் கடும் தாக்கு!