ETV Bharat / state

ஏபிவிபி முன்னாள் தேசியத் தலைவர் வன்கொடுமை சட்டத்தில் கைது - ஏபிவிபி முன்னாள் தேசியத் தலைவர் கைது

ஏபிவிபி அமைப்பின் முன்னாள் தேசிய தலைவர் டாக்டர் சுப்பையா சண்முகம் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஆதம்பாக்கம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஏபிவிபி-யின் முன்னாள் தேசிய தலைவர் வன்கொடுமை சட்டத்தில் கைது

author img

By

Published : Mar 19, 2022, 6:13 PM IST

சென்னை: கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், சென்னை நங்கநல்லூர் தனியார் குடியிருப்பில் வசித்து வந்த, அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பின் முன்னாள் தேசிய தலைவரும், மருத்துவருமான சுப்பையா சண்முகத்துக்கும், அதே குடியிருப்பில் வசித்து வரும் வயதான பெண்மணி ஒருவருடன் இடையே கார் பார்க்கிங் தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

பெண்மணிக்கு சொந்தமான கார் பார்க்கிங் இடத்தில் தொடர்ந்து மருத்துவர் சுப்பையா சண்முகம் காரை நிறுத்தி பிரச்சினையில் ஈடுபட்டு வந்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வயதான பெண்மணிக்கு பல்வேறு விதமாக தொந்தரவுகளைக் கொடுத்துள்ளார். அதில் உச்ச பட்சமாக பெண்மணியின் வீட்டில் சிறுநீர் கழித்துள்ளார். இது தொடர்பாக அந்தப் பெண்மணி எதுவும் செய்ய முடியாத நிலையில் ,பெண்மணிக்கு ஆதரவாக அதே குடியிருப்பில் வசித்து வரும் பாலாஜி விஜயராகவன் என்பவர் ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

பெண் வீட்டின் முன்பு சிறுநீர் கழிக்கும் சிசிடிவி காட்சி

புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தது. டாக்டர் சுப்பையா சண்முகம் பெண்மணி வீட்டில் சிறுநீர் கழிக்கும் அந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, காங்கிரஸில் இருக்கும் தேசிய மாணவர் அமைப்பு சார்பில் இதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டு, சுப்பையா சண்முகத்தை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

இந்த விவகாரம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு கண்டனங்கள் எழுந்தன. இதற்கு பதில் அளிக்கும் வகையில் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் தேசிய செயலாளர் நிதி திரிபாதி, காங்கிரஸின் மாணவர் அமைப்பு தெரிவித்த குற்றச்சாட்டுக்கும், சமூக வலைதளங்களில் தெரிவித்தக் கருத்துக்கும் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டார்.

வேண்டுமென்றே ஏபிவிபி-யின் தேசியத் தலைவர் மீது களங்கம் சுமத்துவதாக குற்றம் சாட்டினார். தொடர்ந்து பல்வேறு விதமான வகையில் அழுத்தம் ஏற்பட்ட நிலையில் ஆதம்பாக்கம் காவல்துறையினர் இது தொடர்பாக விசாரணை நடத்தினர். விசாரணை நடத்தியதில் ஏபிவிபி இன் முன்னாள் தலைவர் டாக்டர் சுப்பையா சண்முகம் பெண்மணிக்கு பல்வேறு தொந்தரவுகள் கொடுத்ததும், சிறுநீர் கழித்ததும் உண்மை எனத் தெரியவந்தது.

பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கிழ் கைது

இதனையடுத்து தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் டாக்டர் சுப்பையா சண்முகத்தின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தற்போது ஏபிவிபி-யின் முன்னாள் தேசிய தலைவர் சுப்பையா சண்முகத்தை ஆதம்பாக்கம் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாகக் கடந்த பிப்ரவரி மாதம் முதல்வர் வீட்டின் முன்பாக ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக போராட்டம் நடத்தியதற்குத் தூண்டுகோலாக இருந்ததாகவும் , போராட்டத்தில் கைதானவர்களை சிறையில் இருந்தபோது சென்று சந்தித்துள்ளார். இதனால் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் புற்றுநோய் பிரிவு தலைவராக அரசு வேலையில் இருந்து கொண்டு, இது போன்ற செயல்களில் ஈடுபட்டதால் மருத்துவ கல்வி இயக்குனரகம் அவரை சஸ்பெண்ட் செய்தததும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:நரிக்குறவர் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்திட பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.