சென்னை: தாம்பரம் அடுத்த நெடுங்குன்றம் ஏரியில் ஏராளமான முதலைகள் உள்ளன. இந்த ஏரியில் உள்ள முதலைகள் அடிக்கடி குடியிருப்பு பகுதியில் நுழைந்து பொதுமக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், நெடுங்குன்றம் மேட்டு தெருவில் 7 அடி நீளம் உள்ள முதலை குடியிருப்பு பகுதியில் இன்று (அக்.26) அதிகாலை நுழைந்தது.
இதனைக் கண்ட பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். உடனே அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் ஒன்று சேர்ந்து கயிறு கட்டி முதலையைப் பிடித்து வனத்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். கிண்டியில் இருந்து வந்த வனத்துறையினர் முதலையைக் கொண்டு சென்றனர்.
நெடுங்குன்றம் ஏரியில் உள்ள முதலைகளால் இப்பகுதி மக்களுக்கு உயிருக்குப் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் நிலவுவதால் ஏரியில் உள்ள முதலைகளைப் பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: வீடியோ: இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்று வானவெடி வெடித்த இளைஞர்