ETV Bharat / state

அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழ்நாடு, புதுவையில் மிதமழை - வானிலை ஆய்வு மையம்!

சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

puviarasan press meet
puviarasan press meet
author img

By

Published : Dec 1, 2019, 3:23 PM IST

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் பேசுகையில்,'மேலடுக்குச் சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பொழிவு இருக்கும். அடுத்த இரண்டு நாட்களில் மழையின் அளவு படிப்படியாக குறைந்து, டிசம்பர் 15ஆம் தேதிக்கு பிறகு மீண்டும் மழைப்பொழிவு இருக்க வாய்ப்புள்ளது.

அடுத்த 24 மணி நேரத்திற்கு ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, வேலூர், திருவள்ளூர் மாவட்டம், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கன மழையும்; காஞ்சிபுரம், விழுப்புரம், புதுவை, ஈரோடு, கடலூர், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கன மழையும்; கன்னியாகுமரி, மதுரை, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர் புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழையும், ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்' என்றார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், ' கடந்த 24 மணி நேரத்தில் 14 இடங்களில் மிக கன மழையும், 53 இடங்களிலும் கன மழையும் பதிவாகியுள்ளது.

அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் 19 சென்டிமீட்டர், கடலூரில் 17 சென்டிமீட்டர், நெல்லையில் 15 சென்டிமீட்டர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 13 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: லட்சத்தீவு பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால் சூறாவளி காற்று வீச வாய்ப்பு இருப்பதால், இன்று குமரிக்கடல், லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளுக்கும், நாளை லட்சத் தீவு பகுதிகளுக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

செய்தியாளர்களிடம் பேசும் புவியரசன்

அக்டோபர் 1ஆம் தேதி முதல் இன்றுவரை தமிழ்நாட்டில் 39 செ.மீ மழை பதிவாகி உள்ளது. இது இயல்பை விட 3 செ.மீ அதிகம்’ என்றார். சென்னையைப் பொறுத்தவரை இயல்பை விட 9 செ.மீ., மழை கிடைத்துள்ளது என அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க:

சென்னையில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

Intro:Body:சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பொழிவு இருக்கும் என தெரிவித்தார். மேலும் இரண்டு நாட்களில் மழையின் அளவு படிபடியாக குறைந்து டிசம்பர் 15 ஆம் தேதிக்கு பிறகு மீண்டும் மழை பொழிவு இருக்க வாய்ப்புள்ளது என தெரிவித்தார்.

அடுத்த 24 மணி நேரத்திற்கு ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, வேலூர், திருவள்ளூர் மாவட்டம், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் அதி கன மழையும், சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், புதுவை, ஈரோடு, கடலூர், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கன மழையும், கன்னியாகுமரி, மதுரை, பெரம்பலூர் அரியலூர் ,திருச்சி ,தஞ்சாவூர் புதுக்கோட்டை, சிவகங்கை, மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவித்தார்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழையும், ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என கூறினார்..

தொடர்ந்து அவர் பேசுகையில் கடந்த 24 மணி நேரத்தில் 14 இடங்களில் மிக கன மழையும், 53 இடங்களிலும் கன மழையும் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் 19 சென்டிமீட்டர், கடலூரில் 17 சென்டிமீட்டர், நெல்லையில் 15 சென்டிமீட்டர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 13 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை லட்சத்தீவு பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் சூறாவளி காற்று வீச வாய்ப்பு இருப்பதால் இன்று குமரிக்கடல், லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளுக்கும், நாளை லட்சத் தீவு பகுதிகளுக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்

அக்டோபர் 1ஆம் தேதி முதல் இன்றுவரை தமிழகத்தில் 39 செ.மீ மழை பதிவாகி உள்ளது. இது இயல்பை விட 3 செ.மீ மழை அதிகம் என தெரிவித்தார். சென்னை பொருத்தவரை இயல்பை 9 செ.மீ மழை கிடைத்துள்ளது என தெரிவித்தார்.

Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.