ETV Bharat / state

மருத்துவப் படிப்பிற்கு அரசு கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும்! - அரசுக் கட்டணம்

சென்னை: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் ராஜா மருத்துவ கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு அரசு கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரவீந்திரநாத் வலியுறுத்தியுள்ளார்.

ravindhranath
author img

By

Published : Jun 27, 2019, 6:18 PM IST

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உள்ள ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிக்கும் மாணவர்களுக்கு 5 லட்சத்து 54 ஆயிரத்து 370 ரூபாய் கட்டணமாக நிர்ணயம் செய்து மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை குழு தகவல் வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள மற்ற அரசு மருத்துவக் கல்லூரிகளில் 13 ஆயிரத்து 600 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்க வேண்டும். இது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்டுள்ள வழக்கில், தீர்ப்பு வழங்கியுள்ள நீதிபதிகள் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரிக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளின் கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

அதேபோல் தமிழ்நாட்டில் உள்ள தனியார் மருத்துவ நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் மருத்துவ படிப்பிற்கு அதிகளவில் கட்டணம் வசூலிக்கின்றன. மேலும் மருத்துவப் படிப்பிற்கு விண்ணப்பம் செய்தால் இரண்டு லட்சம் கட்டணமாக செலுத்த வேண்டும் என கூறியுள்ளனர். இதுபோன்ற நன்கொடை வசூல் செய்வதை உச்ச நீதிமன்றம் ஏற்கனவே கண்டித்துள்ளது.

இந்நிலையில், தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகங்களுக்கு மத்திய, மாநில அரசுகளின் கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும். மருத்துவ படிப்பில் உயர் சாதியினருக்கு 10% இட ஒதுக்கீட்டில் படிக்க வேண்டும் என்பதை தமிழ்நாடு அரசு நிறைவேற்றக்கூடாது. இதனால் சமூக நீதி பாதிக்கப்படும். மத்திய அரசு ஒதுக்கீட்டு இடங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு முறையை கொண்டு வரவேண்டும்” என்றார்.

Intro:அண்ணாமலை பல்கலைக்கழகத்தின்
மருத்துவப் படிப்பிற்கு அரசு கட்டணம்Body:சென்னை, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் ராஜா மருத்துவ கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு அரசு கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரவீந்திரநாத் வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை தமிழக அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உள்ள ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிக்கும் மாணவர்களுக்கு 5 லட்சத்து 54 ஆயிரத்து 370 கட்டணமாக நிர்ணயம் செய்து மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை குழு வெளியிட்டுள்ள தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள மற்ற அரசு மருத்துவக் கல்லூரிகளில் 13 ஆயிரத்து 600 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்க வேண்டும். இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்டுள்ள வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ள நீதிபதிகள் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரிக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளின் கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
அதேபோல் தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவ நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் மருத்துவ படிப்பிற்கு அதிக அளவில் கட்டணம் வசூலிக்கின்றன . மேலும் மருத்துவப் படிப்பிற்கு விண்ணப்பம் செய்தால் இரண்டு லட்சம் கட்டணமாக செலுத்த வேண்டும் என கூறியுள்ளனர்.
இதுபோன்ற நன்கொடை வசூல் செய்வது உச்ச நீதிமன்றம் ஏற்கனவே கண்டித்துள்ளது. எனது தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகங்களுக்கு மத்திய மாநில அரசுகள் கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும்.
மருத்துவ படிப்பில் உயர் ஜாதியினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு படிக்க வேண்டும் என்பதை தமிழக அரசு நிறைவேற்ற கூடாது. இதனால் சமூகநீதி பாதிக்கப்படும். மத்திய அரசு ஒதுக்கீட்டு இடங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு முறையை கொண்டு வரவேண்டும் என கூறினார்.Conclusion:null
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.