ETV Bharat / state

உங்கள் இல்ல நிகழ்வுகளில் உணவு மீதம் ஆகிறதா? - காவல் கரங்கள் காத்திருக்கிறார்கள்!

சென்னையில் வீடு இல்லாதவர்களுக்கும் முதியோர்களுக்கும் உணவளிக்கும் காவல் துறையின் காவல் கரங்கள் என்ற திட்டம் மூலம் இதுவரை பல்வேறு சமூக சேவைகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் இல்ல நிகழ்வுகளில் உணவு மீதம் ஆகிறதா? -  காவல் கரங்கள் காத்திருக்கிறார்கள்!
உங்கள் இல்ல நிகழ்வுகளில் உணவு மீதம் ஆகிறதா? - காவல் கரங்கள் காத்திருக்கிறார்கள்!
author img

By

Published : Feb 22, 2023, 7:24 AM IST

சென்னை தலைமையக கூடுதல் ஆணையர் லோகநாதன் அளித்த பேட்டி

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை காவல் துறை இணைந்து ஒருவேளை உணவிற்காக போராடும் வீடில்லா ஏழைகளுக்கும், முதியவர்களுக்கும் தேடிச்சென்று உணவு வழங்கவுள்ளது, அத்திட்டத்தின் பெயர் தான், இந்த காவல் கரங்கள். இந்த காவல் கரங்களில் 40 சமூக தொண்டு நிறுவனங்களும், 100க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களும் உள்ளனர்.

இவர்கள் ஹோட்டல் மற்றும் விருந்து உள்ளிட்ட இடங்களில் மீதமுள்ள உணவை சேகரித்து, இதுபோன்று உணவில்லா ஏழைகளுக்கு அளித்து வருகின்றனர். இந்த திட்டம், சென்னை காவல் துறையால் கடந்த 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் கைவிடப்பட்ட முதியவர்களை சென்னை மாநகராட்சி, சமூக நலத்துறை முதியோர் இல்லம் மற்றும் சமூக தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து சேவை புரிந்து வருகின்றனர்.

இதுபோன்ற சேவைகளுக்காக சென்னை காவல் துறை, ஸ்காட்ச் விருது மற்றும் முதலமைச்சரின் சிறந்த பயிற்சிக்கான விருது உள்ளிட்டவற்றைப் பெற்றுள்ளது. இந்தத் திட்டம் தற்போது சென்னை காவல் துறையின் கூடுதல் ஆணையர் லோகநாதன் தலைமையில் செயல்பட்டு வருகிறது.

இந்தத் திட்டத்தின் மூலம் 4,000க்கும் மேற்பட்ட மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களை மீட்டு அவர்களின் வீட்டில் சேர்த்தும், வெளி மாவட்டத்தில் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து குடும்பத்திடமிருந்து பிரிந்து சென்று சென்னையில் பிச்சை எடுப்பவர்கள் மற்றும் உணவில்லாமல் தவிப்பவர்கள் என 505 பேரை குடும்பத்தோடு சேர்த்து வைத்துள்ளனர்.

அதேபோல் 373 மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், அரசு மருத்துவமனைகளில் காவல் கரங்கள் உதவியுடன் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்த காவல் கரங்கள் மூலம் ஆதரவற்ற இல்லங்களிலும், தனிப்பட்ட வீடுகளிலும் சட்ட விரோதமாக யாரேனும் அடைக்கப்பட்டு வைத்திருக்கிறார்களா என்று திடீர் சோதனை நடத்தி, அவர்களை இணைக்கும் நடவடிக்கையினையும் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் உணவில்லாமல் தவிக்கும் வீடில்லா ஏழைகள் மற்றும் முதியவர்களுக்கு உணவு வழங்கும் சேவையையும் காவல் கரங்கள் செய்து வருகின்றன. இதற்காக 94444 71710 என்ற எண் அறிவிக்கப்பட்டு, அதன் மூலம் பொதுமக்கள் உணவகங்களில் மற்றும் விருந்துகளில் மீதமுள்ள உணவுகளை செல்போன் மூலம் அழைத்து தெரிவிக்கின்றனர். இதனையடுத்து காவல் கரங்களில் உள்ள தன்னார்வலர்கள், அதனை சேகரித்து உணவில்லா மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.

மேலும் சென்னையில் ஆதரவற்று இருக்கும் இது போன்ற மக்களுக்காக 2 ஆம்புலன்ஸ்களும், 2 எலக்ட்ரிக் வாகனங்களும் காவல் கரங்களில் செயல்பட்டு வருகிறது. இவ்வாறு ஆதரவற்றவர்களை மீட்பதோடு மட்டுமல்லாது சுமார் 1,863 உரிமை கோரப்படாத உடல்களை, தன்னார்வலருடன் சேர்ந்து எரிக்கவும் மற்றும் புதைக்கவும் காவல் கரங்கள் உதவி செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சென்னை: பொது இடங்களில் குப்பை கொட்டியவர்களுக்கு ரூ.9 லட்சம் அபராதம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.