ETV Bharat / state

கள்ளச்சாராயம் பலி எதிரொலி - தீவிர ரோந்து பணிகளில் இறங்கிய காவல்துறை! - வழக்குகள் பதிவு

தமிழகத்தில் கள்ளச்சாராயம் குடித்து 16 பேர் பலியான நிலையில் தமிழகம் முழுவதும் கள்ளச்சாராயம் விற்கும் கும்பலைப் பிடிக்கும் சிறப்பு தேடுதல் வேட்டையில் 1,842 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1,558 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையில் கள்ளச்சாராயம் குடித்து 16 பேர் பலி! டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவில் தீவிர நடவடிக்கை..

author img

By

Published : May 16, 2023, 9:40 AM IST

சென்னை: விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்த பல பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் சிகிச்சைப் பலனின்றி இதுவரை 16 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால், கள்ளச்சாராயம் விற்பனை செய்த வியாபாரிகளை உடனடியாக கைது செய்யக்கோரி, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கிய நிலையில், கள்ளச்சாராயம் விற்பனை செய்யும் வியாபாரிகளைக் கைது செய்ய சிறப்பு தேடுதல் வேட்டையில் ஈடுபட அனைத்து போலீசாருக்கும், டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக அனைத்து மாவட்ட ஏ.எஸ்.பி தலைமையில், தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் மூலம் 1842 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1,558 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டிருப்பதாகத் தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும், கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 19,028 லிட்டர் கள்ளச்சாராயம் கைப்பற்றப்பட்டு உள்ளது. 4,943 லிட்டர் சாராய ஊறல்கள் அழிக்கப்பட்டுள்ளது. கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்பட்ட 16,493 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு, கள்ளச்சாராயம் கடத்த பயன்படுத்திய ஒரு நான்கு சக்கர வாகனம் மற்றும் ஏழு இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

இந்த 2023ஆம் ஆண்டில், இதுவரையில் 55,474 சாராய வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 56,173 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் 4,534 பேர் பெண்கள் ஆவர். மேலும், இதுவரையில் 2,55,078 லிட்டர் கள்ளச்சாராயம் கைப்பற்றப்பட்டு, 60 நான்கு சக்கர வாகனங்கள் உட்பட 1,077 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், கள்ளச்சாராய வழக்குகளில் ஈடுபட்ட 79 நபர்களை, இந்தாண்டு குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்துள்ளதாகத் தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும், கள்ளச்சாராயத்தில் மூலப்பொருளான மெத்தனால், தொழிற்சாலைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகள் உள்ளிட்ட சில அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மூலப்பொருள் வியாபாரிகளுக்குக் கிடைப்பது எப்படி என விற்பனை செய்யும் கடைகளின் பட்டியலை தயார் செய்து போலீசார் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதுமட்டுமின்றி, கள்ளச்சாராயம் விற்பனை செய்து ஏற்கனவே கைது செய்யப்பட்டிருக்கும் கள்ளச்சாராய வியாபாரிகளின் பட்டியலைத் தயார் செய்து, அவர்களின் நடவடிக்கைகளைக் கண்காணிக்கவும் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்திற்குள் சாராயம் கொண்டு வராத படி முக்கிய சாலைகளில் வாகன சோதனையைத் தீவிரப்படுத்தவும் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த தீவிர நடவடிக்கையானது தொடர்ந்து நடைபெறும் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

இதையும் படிங்க: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு - லாட்டரி அதிபர் மார்ட்டினின் ரூ.457 கோடி சொத்துக்கள் முடக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.